உலகநாயகனே தொடர்ந்து மக்கள் செல்வன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய செய்த விஜய் சேதுபதி.
சென்னை 24 ஜூன் 2021
உலகநாயகனே தொடர்ந்து மக்கள் செல்வன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய செய்த விஜய் சேதுபதி.
உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை சந்தித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
புற்று நோயால் பாதித்த ஒருவரை ஜூம் கால் மூலம் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நேற்று உரையாடினார்.
இந்த உரையாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து, தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.
தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.
அந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.
மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி இந்த செயல் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.