‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை 17 ஆகஸ்ட் 2026 தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி டோர்ம் – The Dorm’ திரைப்படத்தில் முனீஸ்காந்த் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களான சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, ஃபெரோஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கு. கார்த்திக் வசனம் எழுத, படத்தொகுப்பு பணிகளை அனில் கிரிஷ் கவனிக்க, கலை இயக்கத்தை அமர் கீர்த்தி மேற்கொண்டிருக்கிறார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை குட் ஸ்டஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஈ. ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் லைன் புரொடக்ஷன் பணிகளை கிளஸ்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
சுரேஷ் செல்லப்பன் மற்றும் அருண் கார்த்திக் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முனீஸ்காந்தின் தோற்றமும்.. ஏனைய நட்சத்திரங்களின் சமூக ஊடக நடவடிக்கைகள் மற்றும் கலாட்டாக்கள் இடம் பிடித்திருப்பதால்… இளம் தலைமுறை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
error: Content is protected !!