இயக்குனரின் இரண்டாவது திரைப்படத்திலும் கூட்டணி அமைத்த யோகிபாபு.

சென்னை 06 ஜூன் 2021இயக்குனரின் இரண்டாவது திரைப்படத்திலும் கூட்டணி அமைத்த யோகிபாபு.

தமிழில் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் பேய் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர் மில்கா செல்வகுமாரின் இரண்டாவது திரைப்படம் இது

நடன இயக்குநர் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து நடிகர் ( நட்டி ) நட்ராஜ் யோகிபாபு நடித்த ‘சண்டிமுனி’ எனும் பேய் திரைப்படத்தை இயக்கியதின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மில்கா செல்வகுமார்.

சண்டிமுனி திரைப்படத்திற்கு பின் இரண்டாவதாக இயக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திலும் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாகவும், வில்லனாக சண்டைப்பயிற்சி இயக்குநர் ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் யோகிபாபுவின் தோற்றத்துடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!