ராதே ஷியாம் திரைப்படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

சென்னை 20 அக்டோபர் 2021 ராதே ஷியாம் திரைப்படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

வம்சி, பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது.

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும்.

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம்.

‘விக்ரமாதித்யா யார்?’ என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று வெளியாகவுள்ள ராதே ஷியாம் திரைப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.