Thursday, December 9
Shadow

ஜெய்பீம் திரை விமர்சனம். ரேட்டிங் –4.5 /5

நடிகர் நடிகைகள் – சூர்யா, பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், தமிழ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ. பாஸ்கர், சின்ராசு, ராஜேந்திரன், மற்றும் பலர்.

தயாரிப்பு – 2டி என்டர்டெய்ன்மென்ட்
ஜோதிகா & சூர்யா.

இயக்கம் –  தா.செ.ஞானவேல்.

ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர்.

படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்.

இசை – ஷான் ரோல்டன்.

திரைப்படம் ஒடிடியில் வெளியான தேதி – 02 அக்டோபர் 2021

ரேட்டிங் –4.5 /5

தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ திரைப்படங்கள் வருகிறது.

அனைத்து திரைப் படங்களுக்கும் இந்த திரைப்படம் மிக பெரிய உதாரணம் தமிழ் திரைப்பட உலகிற்கு மட்டும் இல்ல உலக திரைப்பட உலகிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு ஒரு திரைப்படம்தான் ஜெய் பீம்.

தமிழ் தமிழ் திரைப்பட உலகில் தனது மறுமலர்ச்சி காலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

மலையாள திரைப்பட உலகம் போல, படைப்பாளிகள் தங்கள் “கொள்கைகளை,” கதைகளையும் அச்சமின்றியும் வெளிப்படையாகவும், வலுவாகவும், எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஒன்றுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படுவது இது இரண்டாம் முறை கடைசியாக 2010ல் வெளியான ரத்த சரித்திரம் திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த ஜெய் பீம் திரைப்படம் உருவாகியுள்ளது.

திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் நிலையில் தணிக்கைக் குழு தற்போது இந்தத் திரைப்படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

எத்தனையோ நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த இந்தியா திரைப்பட உலகில் நடிகர்களில் யாரும் செய்யாத ஒரு ஒரு காரியத்தை நடிகர் சூர்யா அவர்கள் மிக தைரியமாக செய்துள்ளார்.

சிறந்த நேர்த்தியான ஒரு திரைப்படம் கொடுத்து இருப்பது நமக்கு பெருமையான விஷயம்.

தமிழ்  திரைப்பட உலகில் உள்ள நடிகர் சூர்யா தமிழ்நாட்டிற்கும் தமிழ் திரைப்பட உலகிற்கு ஒரு பொக்கிஷம் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் நடிகர் சூர்யா இந்த திரைப்படம் மூலம் குறிப்பிட்ட சமுகத்து மிக பெரிய அந்தஸ்தை இந்த ஜெய் பீம் திரைப்படம் மூலம் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை  வழங்கி இருக்கிறார்கள்.

சூரியாவை பத்தி பேசினா பேசிகிட்டே இருக்கலாம் ஜெய்பீம் திரைப்படத்தோட விமர்சனத்தை பார்ப்போம்.

பழங்குடி இன மக்களுக்காக அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து நீதி பெற்று தந்த வழக்கறிஞர் சந்துருவின் சாதனை கதை.

Read Also  பிகில் திரை விமர்சனம்

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் நடந்த ஓர் உண்மைக் கதையின் பதிவுதான் ஜெய் பீம் திரைப்படம்.

அவர் மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் வாதாடி ஜெயித்தவர் வழக்கறிஞர் சந்துரு.

காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் மீது பொய் வழக்குகளை சுமத்தி கொடுமைப்படுத்துகிறார்கள்.

கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜாக்கண்ணு கதை நாயகியாக (லிஜோமோல் ஜோஸ்) செங்கேணி இருவரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணவன் மனைவி. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள், வயிற்றில் ஒரு குழந்தை என வாழ்க்கையை எளிமையாக ஒடுக்கப்பட்ட மக்களாக மலை வாழ் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

காட்டில் பன்றி எலி கிடைப்பதை வைத்து தங்களது வயிற்றை நிரப்பி வரும் இவர்களை அக்கிராமத்தில் வசிக்கும் வேற்று சமூகத்தினர் மட்டமான பார்வையால் பார்த்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

ஊரில் உள்ள ஆளுங்கட்சி ஊராட்சி மன்ற மற்றும்
ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு பிடிக்கச் செல்கிறார் கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜாக்கண்ணு.

அதன்பின் சில நாட்களில் ஊர் தலைவர் வீட்டில் நகைகள் திருடுபோகிறது.

நகை திருடியது கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜா கண்ணு
வாக இருக்கலாம்.

இதற்கு காரணம் கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜா கண்ணுதான் என்று முடிவு செய்து காவல்துறையினர் அவரை தேடுகிறது.

கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜாக்கண்ணு அதே நேரம் வெளியூரில் வேலைக்கு செல்கிறார்.

வீட்டில் அவர் இல்லாததால் மனைவி கதை நாயகியாக (லிஜோமோல் ஜோஸ்) செங்கேணி மற்றும் உறவினர்களை காவல்துறையினர் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள்.

இந்நிலையில் என யூகமாக ஊராட்சி மன்ற தலைவர் கூற, மேலிடத்து ப்ரஷரில் ராஜாகண்ணு, அவரது தம்பி, மாப்பிள்ளை என மூவரையும் கைது செய்கின்றனர் காவல்துறையினர்.

ஒரு கட்டத்தில் கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜாக்கண்ணு கிடைத்துவிட, திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி காவல்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள்.

மூவரையும் லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர் காவல்துறையினர்.

அடுத்தநாளே மூவரும் லாக்கப்பில் இருந்து தப்பித்து விட்டதாக காவல்துறையினர் கதை நாயகியாக (லிஜோமோல் ஜோஸ்) செங்கேணியிடம் கூறுகின்றனர்.

கதை நாயகனாக (மணிகண்டன்) ராஜாக்கண்ணுவை தேடும் மனைவி, வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) உதவியை நாடுகிறார்.

இறுதியில் ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? நகைகளை திருடியது யார்? என்பதுதான் இந்த ஜெய் பீம் திரைப்படத்தின் மீதிக்கதை.

திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா.

Read Also  அன்பிற்கினியாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 3.75 /5

வழக்கமான நடிப்பு இல்லாமல் வேறொரு சூர்யாவை இந்த ஜெய் பீம் திரைப்படத்தில் பார்க்க முடிகிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத இவரின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் நம்மளை ரசிக்க வைத்திருக்கிறது.

ராஜாக்கண்ணு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் மணிகண்டன்.

காவல்துறையினரிடம் அடிவாங்கும் போது மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.

மணிகண்டனுக்கு பேர் சொல்லும் திரைப்படமாக ஜெய் பீம் அமைந்திருக்கிறது.

திரைப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கும் மணிகண்டனுக்கு தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது

இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ் செங்கேணி கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு.

நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

கணவனுக்காக ஏங்குவது, போலீசிடம் அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அனுபவ நடிப்பை மிக அழகாக கொடுத்து இருக்கிறார்.

எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான காட்டுமிராண்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர்  தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார்.

காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளார் . இயக்குனர் தா.செ.ஞானவேல்

திரைபீபடத்தில் நடித்த கதாபாத்திரங்கள் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நிச்சயம் விருதுகள் குவியும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.

குறிப்பாக சூர்யா ராஜகன்னாக நடித்த மணிகண்டன் செங்கிநியாக நடித்த லிஜாமோல் ஜோஸ் போன்றவர்களுக்கு மற்றும் இயக்குனர் தா.செ.ஞானவேல்
விருது நிச்சயம்

இருளர்கள் சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வரும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என நிரைப்படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.

இந்த ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து
கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் த.செ ஞானவேல்.

காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குனர் த.செ ஞானவேல்.
தோலுரித்துக் காட்டுகிறார்.

அதே சமயம் நல்ல போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிக்க தவறவில்லை இயக்குனர் த.செ ஞானவேல்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான அடக்குமுறை மற்றும் அவர்களுக்கெதிரான அநியாயங்களைச் சமரசமின்றி அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்
த.செ. ஞானவேல்.

ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர் மழைவாழ் மக்கள் வாழும் இடத்தை மிக அருமையாக காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பாடலும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்கள் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

Read Also  துக்ளக் தர்பார் திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5

ஜெய்பீம் இந்த திரைப்படம் காவல்துறையினரையும் அதிகார வர்க்கத்தையும் சாட்டையடி கொடுத்துள்ள திரைப்படம்.

CLOSE
CLOSE