சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்..

சென்னை 11 ஜூன் 2021

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்.

தமிழ் திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சார்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சி கலைஞர் விஜயகாந்த், இளைய திலகம் பிரபு, சியான் விக்ரம், அஜித்குமார், தளபதி விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி.

இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரில் நடிகர் சார்லி கூறியிருப்பதாவது…

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய பெயரில் என்னுடைய அனுமதி இன்றி, ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!