தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜக-வினர் பங்கேற்க தற்காலிக தடை!’ -திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
சென்னை 12 ஜூன் 2021
தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜக-வினர் பங்கேற்க தற்காலிக தடை!’ -திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
நேற்று மாலை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் இனிமேல் பா.ஜ.க-வைச் சேர்ந்த யாரும் செய்தி நிறுவனங்களின் தொலைக் காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கமலாலயத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், இல.கணேசன், வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், குஷ்பூ, கே.டி.ராகவன் மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அதில், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாகப் பங்கேற்பவர்களுக்கு தங்கள் கருத்தைத் தெரிவிக்கப் போதியளவு நேரம் கொடுக்கப்படுவதில்லை என என்றும், அப்படியே தெரிவிக்க முயன்றாலும் எதிர் தரப்பினர் பேச விடாமல் தடுத்து பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சிப்பதாகவும் பா.ஜ.க சார்பில் விவாதங்களில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று வரும் வானதி சீனிவாசன், கே.டி ராகவன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது











