தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இன்று நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளின் விபரங்கள்.

சென்னை 26 மே 2021

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இன்று நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளின் விபரங்கள்.

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல் ஜனநாயக முறைப்படி இன்று (26.05.2021) நடந்து முடிந்தது.

கூட்டமைப்பில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தம் 20.

அதில் பதிவான வாக்குகள் 15.

பதிவான வாக்குகள் அனைத்தும் ஒருமித்த விதத்தில் கீழ்க்கண்ட நிர்வாகிகளுக்கு ஆதரவாக பதிவாகி உள்ளன .

அவ்வகையில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பின்வருமாறு …

திரு. உதயம்.கே கூட்டமைப்பின் தலைவர்.

திரு. வி.பி.தமிழ்பாரதி கூட்டமைப்பின்
செயலாளர்

திரு. ராஜா வெங்கையா கூட்டமைப்பின் பொருளாளர்

துணைத் தலைவர்கள் திரு.டி.நேமிராஜ் திரு.முருகன் விஜய்

இணைச் செயலாளர்கள் திரு.குமரேசன் திரு.ஏ.கஜபதி

இனி மேற்காணும் நிர்வாகம் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நலனுக்காக பொறுப்புடன் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இன்று நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

error: Content is protected !!