சார்பட்டா பரம்பரை திரைப்படம்தான் எனது அடையாளம்; நெகிழ்ச்சியில் சாம்பியன் ஸ்டீவ்!
சென்னை 10 ஜனவரி 2022 சார்பட்டா பரம்பரை திரைப்படம்தான் எனது அடையாளம்; நெகிழ்ச்சியில் சாம்பியன் ஸ்டீவ்!
பா இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸரில் ஒருவராக வந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் பாடி பில்டிங் சாம்பியன் ஸ்டீவ்.
இந்திய அளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு 2017 முதல் 2019 வரை தொடர்ந்து மூன்று முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார் ஸ்டீவ்.
அதுமட்டுமல்லாமல் உலகளவில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்ட் டைமண்ட் கப் பட்டத்தை வென்றிருக்கிறார் ஸ்டீவ்.
சாம்பியன் ஆனதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
சார்பட்டா பரம்பரை படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் ஸ்டீவ்.
அதுமட்டுமல்லாமல், அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் அழைத்து ஸ்டீவை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
தற்போதும், சிம்புவுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாடி பில்டர் ஸ்டீவ்.
இன்னும் பல படங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் உள்ளம் பூரிப்புடன் கூறுகிறார் மிஸ்டர் வேர்ல்ட் ஸ்டீவ்.