சிறுவாபுரி முருகன் கோவிலில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஊர் மக்களால் சிறைபிடிப்பு.
சென்னை 16 ஜூன் 2021
சிறுவாபுரி முருகன் கோவிலில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஊர் மக்களால் சிறைபிடிப்பு.
சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் மிகவும் பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது.
சீதை தனது பிள்ளைகள் லவ, குசா தன் தாயுடன் வனத்தில் இங்கே தங்கி இருந்தார்கள்.
வள்ளியை திருமணம் செய்த முருகன் சோலைகள் சூழ்ந்த இடத்துக்குச் செல்ல விரும்பி வந்த இடமே இது.
சிறுவர்கள் (லவ குசா, பால முருகன்) வந்த இந்த இடம் சிறுவாபுரி (சிறுவர்கள் புரி) என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுவாபுரி முருகன் கோவில் மிகவும் ஐதிகமான கோவில் ஆகும்.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள இந்த கோயிலில் நடிகரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தரிசனம் செய்துள்ளார்.
அவருக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி விஐபி தரிசனத்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலறிந்த சிறுவாபுரி கிராம மக்கள் செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் ஐசரி கணேஷ் சிறுவாபுரி கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.
இதனையறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்











