அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது !

சென்னை 01 பிப்ரவரி 2022 அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது !

வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தினை PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.

இந்த தோஜவு திரைப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

PG முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அருள் E சித்தார்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த தேஜாவு திரைப்படத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப் படத்தின் டீசரை கடந்த 27ஆம் தேதி அருள்நிதியின் சகோதரரும், நடிகர்,  தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற  உறுப்பினருமான உதயநிதி  ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து திரையுலக பிரபலங்களும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படக்குழுவினரை பாராட்டியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த தேஜாவு திரைப்படத்திற்கு திரையுலக வட்டாரத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.