நடிகர் ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது!

சென்னை 16 செப்டம்பர் 2021 நடிகர் ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது!

விநாயகர் சதுர்த்தி திருநாளில் வெளியான, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள “எண்ணித் துணிக” படத்தின் டீசர், YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோக தளத்திலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நடிகர் ஜெய்யின் இணையற்ற நடிப்பு, இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை, விழிகளை விரயச் செய்யும் தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய மனம் மயக்கும் பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங் அனைத்தும் இணைந்த, இந்த டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

எண்ணித் துணிக படத்தை S.K.வெற்றி செல்வன் எழுதி இயக்கியுள்ளார்.

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

சாம் CS இசையமைக்கிறார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Think Music நிறுவனம் எண்ணித் துணிக படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது, விரைவில் இசை ஆர்வலர்களுக்கு சாம் CS உடைய மெஹா ஹிட் பாடல்களை வழங்கவுள்ளது.