தமிழகத்தில் ஜூன் 28- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு விபரங்கள் உள்ளே.

சென்னை 21 ஜூன் 2021

தமிழகத்தில் ஜூன் 28- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு விபரங்கள் உள்ளே.

11 மாவட்டங்களில் தளர்வு இல்லை வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் தளர்வு என்ன விபரங்கள் உள்ளே.?

மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நோய்த் தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

01 முதல் வகை மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளன.

இந்த 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

02 இரண்டாம் வகை மாவட்டங்கள்.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் இரண்டாம் வகையில் உள்ளன.

03 முன்றாம் வகை மாவட்டங்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையில் உள்ளன.

வகை 3 ல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

>> தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்

>> உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள்( பார்சல் சேவை மட்டும்) மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மின்னணு வணிக நிறுவுனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

>> அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடனும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவுனங்கள், குறுநிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

>> எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

>> குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து, சிறார்களுக்கான கண்காணிப்பு/பராமரிப்பு , சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

>> அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகயாகவும் இயங்கும்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுவர்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என
தமிழக முதல்வர் அறிவிப்பு.

error: Content is protected !!