ஜெய்பிரத் தேசாய் இயக்கியுள்ள இந்த வாழ்க்கை சித்திரம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 1, 2022 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படும்.

சென்னை 07 மார்ச் 2022 ஜெய்பிரத் தேசாய் இயக்கியுள்ள இந்த வாழ்க்கை சித்திரம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 1, 2022 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படும்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ் மற்றும் பூட்ரூம் ஸ்போர்ட்ஸ் புரடக்‌ஷன் தயாரிப்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஷ்ரேயாஸ் தல்பேடே நடிப்பில் வெளிவரவுள்ள கோன் பிரவின் தாம்பே?’ பயோபிக்கைக் கண்டு களியுங்கள்:

மும்பை, இந்தியா, 7 மார்ச் 2022: இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றை கோன் பிரவின் தாம்பே?’ என்ற தலைப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ் மற்றும் பூட்ரூம் ஸ்போர்ட்ஸ் புரடக்‌ஷன் இணைந்து தயாரிக்க உள்ளதன் அறிவிப்பும் மற்றும் படத்தின் முதல் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 1, 2022 அன்று வெளியிடத்பிரபல நடிகர் ஷ்ரேயஸ் தல்படே இந்த எழுச்சியூட்டும் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். கிரிக்கெட் மீது கொண்டுள்ள காதலை நிரூபிக்க கண்களில் கனவுகளோடு 41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற்றும் ஆர்வத்தைப் பற்றிய தனித்துவமான, அனைவரையும் ஈர்க்கும் இத்திரைப்படம் கிரிக்கெட்டைப் போலவே டைனமிக்காக, வேடிக்கையாக, சவாலானதாக மற்றும் சிலிர்ப்பு ஏற்படுத்துவதாக இருக்கும். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பே தனது வாழ்க்கை சித்திரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், எனது கதை பலரை ஊக்குவித்துள்ளது என்பதையும் இப்போது திரைப்படமாக உருவாக உள்ளது என்பதையும் அறிவது மகிழ்ச்சி தருகிறது. சூழல் அப்படி இருந்தாலும் மனம் தளராமல் தன் திறனைக் குறைத்து மதிப்பிடாமல் தங்கள் கனவுகளை எட்டும் உத்வேகத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதே என் ஒரே விருப்பம். எனது கதை திரைப்படமாக வருவதை எனது குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர், அந்நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்!” என்றார்.

பிரவின் தாம்பே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே கூறியதாவது: “இக்பால் படத்தில் நாயகனாக நடித்து 17 வருடங்களுக்குப் பின்னர் இப்போது பிரவீனாக நடித்ததை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்தப் பாத்திரமும் கதையும் எனக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிட்டும் வாய்ப்பை வழங்கியது மற்றும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசித்தேன். பூட்ரூம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இந்தப் பாத்திரத்தில் என்னைக் கற்பனை செய்த எங்கள் திறமையான இயக்குனர் ஜெய்ப்ராத் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பிரவீனைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குப் பெருமை சேர்க்கும் ஒன்று மற்றும் அர்ப்பணிப்பும் பெருமுயற்சியும் தேவைப்படும் இந்தப் பாத்திரத்திற்காக அவருடன் செலவழித்த நேரத்தை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவேன். எங்கள் பார்வையாளர்கள் படத்தை ரசிப்பது மட்டுமல்லாமல், மனதைத் தொடும் இப்படத்தால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.” 

இந்த வாழ்க்கை சித்திரம் குறித்து கருத்து தெரிவித்த டிஸ்னி ஸ்டார், ஸ்டுடியோஸ் இந்தியாவின் தலைவர் பிக்ரம் துகல் கூறுகையில் தனித்துவமான, ஊக்கமளிக்கும் மற்றும் அனைத்திற்கும் மேலாக அனைத்து பார்வையாளர்களுக்கும் மிகவும் பொழுதுபோக்கு வழங்கும் திரைப்படங்களை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும். ‘கோன் பிரவின் தாம்பே?’ அப்படிப்பட்ட ஒரு கதை. கிரிக்கெட்டை மில்லியன் கணக்கானவர்கள் போற்றுகிறார்கள், நேசிக்கிறார்கள் அவர்களில் இந்த மனம் தளரா சாம்பியனையும் சேர்த்துக் கொள்ள நமக்குக் கிடைப்பது . ‘கோன் பிரவின் தம்பே?’ எனும் அற்புதமான திரைப்படம். திரு. பிரவீன் தம்பேவின் இத்தகைய எழுச்சியூட்டும் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் பங்களிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறோம். ஷ்ரேயஸ் தல்படே அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அவர் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளதோடு இந்த வாழ்க்கை சித்திரத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஏப்ரல் அன்று இப்படத்தை வெளியிடுவதை எதிர்நோக்கியுள்ளோம்.” என்றார்.

ஃப்ரைடே ஃபிலிம்வொர்க்ஸ் & பூட்ரூம் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஷீதல் பாட்டியா கூறுகையில் – உத்வேகமான மற்றும் எழுச்சியூட்டும் உள்ளடக்கங்களை வழங்கும் எங்கள் விளையாட்டு வணிகமான பூட்ரூம் ஸ்போர்ட்ஸ்‘ –இன் துவக்கத்தை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதன் துவக்கத்துக்கு பிரவீன் தாம்பே மிகவும் சரியான பொருத்தம். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஜெய்பிரத் தேசாய், ஷ்ரேயஸ் தல்படே மற்றும் ஒட்டுமொத்த குழுவின் படைப்பாற்றல், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு பிரவீன் தம்பேவின் வாழ்க்கையின் கடினமான பயணத்தை ஒரு அழுத்தமான கதையாக மாற்றியுள்ளது. மில்லியன் கணக்கானவர்களுக்கு பிரவீன் ஒரு உத்வேகமாகவும் கனவுகள் மெய்ப்படும் என்பதற்கு உதாரணமும் ஆவார்.” என்றார்.

கிரண் யாத்னியோபவித் எழுதியுள்ள கோன் பிரவின் தாம்பே?’ திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 1, 2022 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படும்.