ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் இன்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை 24 ஜூன் 2021

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் இன்று மாரடைப்பால் காலமானார்.

.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ஒளிப்பதிவாளர் சிவன், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

தமிழ் திரைப்படத்தில் ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் உள்பட பல வெற்றிப் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானர் சந்தோஷ் சிவன்.

இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கி உள்ள இவர், 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவனும் மாலையாள திரையுலகில் கொண்டாடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்.

இவர் சிறந்த ஒளிப்பதிவுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிவன், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 89.

ஒளிப்பதிவாளர் சிவனின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!