கூர்மன் திரை விமர்சனம் ரேட்டிங் 2.75/ 5

நடிகர் நடிகைகள்  – ராஜாஜி, ஜனனி ஐயர், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், சூப்பர் ஹிட் சுப்ரமணி, பிரவீன், முருகானந்தம், சதீஷ் பிரபு, பிரதீப் கே விஜயன், விஜய் சங்கர், மற்றும் பலர்.

இயக்கம் – பிரையன் பி ஜார்ஜ்.

ஒளிப்பதிவு – சக்தி அரவிந்த்.

படத்தொகுப்பு – எஸ் தேவராஜ்.

இசை – டோனி பிரிட்டோ.

தயாரிப்பு – எம.கே. எண்டர்டெயின்மெண்ட்.

ரேட்டிங் – 2.75 /5

இந்த திரைப்படத்தை ஒரு ‘மைன்ட் ரீடர்’ திரைப்படம் என்று இநத திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்கள்.

அதாவது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் எனறு அதை அப்படியே சொல்பவர்தான் ‘மைன்ட் ரீடர்’.

உளவியல் ரீதியான திரைப்படங்களைப் பார்க்க ஒரு சுவாரசியம் இருக்கும். அப்படி என்னதான் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

இந்த ‘கூர்மன்’ திரைப்படத்தின் கதாநாயகன் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒருவர் என்பது தான் திரைப்படத்தின் சுவாரசியம்.

செங்கல்பட்டில் அருகில் உள்ள காந்தலூரில் 12 ஏக்கர் நிலபரப்பில் அவருடைய அடர்ந்த செடி கொடிகள் நடுவே பழமையான பாழடைந்த பண்ணை வீட்டில் கதாநாயகன் ராஜாஜி பாலாசரவணன் மற்றும் செல்லபிராணி சுப்புவுடன் இறந்து போன தனது காதலி கதாநாயகி ஜனனி ஐயரின் நினைவுகளோடு 13 வருடங்களாக அந்த பண்ணை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் ராஜாஜி காவல் துறை ஆய்வாளராக இருக்கிறார்.

அவரது காதலி கதாநாயகி ஜனனி ஐயரை, காதலியின் முறைப் பையன் கொல்ல செய்ய முயற்சித்த போது தனது தலையில் அடிபட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்.

கதாநாயகன் ராஜாஜி காவல் துறை ஆய்வாளர் இருந்து பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.

காவல்துறை ஆய்வாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கதாநாயகன் ராஜாஜிக்கு, ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.

கதாநாயகன் ராஜாஜி இருக்கும் திறமையை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் காவல் துறை அதிகாரியான ஆடுகளம் நரேன்.

அப்படி ஒரு குற்றவாளியை விசாரிப்பதற்காக கதாநாயகன் ராஜாஜி தங்கியிருக்கும் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் காவல் துறை அதிகாரியான ஆடுகளம் நரேன்.

எக்காரணத்தைக் கொண்டும் பங்களா விட்டு வெளியே வராத கதாநாயகன் ராஜாஜி விசாரணை கைதிகளை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து கொடூரமான முறையில் விசாரித்து உண்மையை வீடியோவாக எடுத்து கொடுப்பதுதான்  கதாநாயகன் ராஜாஜியின் வேலை.

கதாநாயகன் ராஜாஜிக்கு எதிரில் இருப்பவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள், என்ன மறைக்கிறார்கள் என்பதை கண்டறியும் அபூர்வ சக்தி இவரிடம் இருப்பதால் அவ்வவ்போது உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் சிக்கலான விசாரணை கைதிகளை கதாநாயகன் ராஜாஜியிடம் ஒப்படைத்து உண்மையை கண்டு பிடித்து டிபார்ட்மெண்டில் நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார் காவல்துறை அதிகாரியான ஆடுகளம் நரேன்.

Read Also  உணர்வு - திரை விமர்சனம்

அப்படி ஒரு குற்றவாளியை கதாநாயகன் ராஜாஜியின் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆடுகளம் நரேன்.

அப்படி அனுப்பி வைத்த குற்றவாளி கதாநாயகன் ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பித்து சொல்கிறான்.

அந்தக் குற்றவாளி தப்பிச் சென்றதால் கோபமடைந்த காவல்துறை அதிகாரியான ஆடுகளம் நரேன் குற்றவாளியை கண்டு பிடித்து தர வேண்டும் என்று கதாநாயகன் ராஜாஜிக்கு கட்டளையிடுகிறார்.

இறுதியில் கதாநாயகன் ராஜாஜியிடம் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? காவல்துறை ஆய்வாளராக இருந்து கதாநாயகன் ராஜாஜி சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம் என்ன ? என்பதுதான் கூர்மன் திரைப்படத்தின் மீதிக்கதை.

கூர்மன் திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜாஜி நடித்திருக்கிறார

கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, கோபம், காதல், பாசம், குற்றவாளி மிரட்டும் போது உள்ள ஆக்ரோஷம் என அவருடைய நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

குறைவான வசனங்கள் இருந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார் கதாநாயகன் ராஜாஜி.

இரண்டாவது கதாநாயகனாக வரும் பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பை மிரட்டி இருக்கிறார்.

கதாநாயகியாக வரும் ஜனனி ஐயர் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி ஜனனி ஐயரை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை.

அவ்வப்போது வந்து காதலர் கதாநாயகன் ராஜாஜிக்கு அட்வைஸ் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

பால சரவணன், ஆடுகளம் நரேன் சூப்பர் ஹிட் சுப்ரமணி, முருகானந்தம், சதீஷ் பிரபு, பிரதீப் கே விஜயன், விஜய் சங்கர், ஆகியோரின் நடிப்பு திரைப்படத்தில் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

சொல்வதை செய்யும் சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் லைட்டிங், காமிரா ஆங்கிளில் ஒரு வித கலவரத்தை ஏற்படுத்துகிறார்.

சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சைக்கோ திரில்லர் திரைப்படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.

டோனி பிரிட்டோவின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டுகிறது.

மைன்ட் ரீடர்’ திரைப்படத்தை
வித்தியாசமான  கதைக் களத்தை கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ்.

வித்தியாசமான சைக்காலஜி த்ரில்லரைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ்.

பெண் வன் கொடுமைதான் பற்றி திரைப்படத்தில் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், பெண் வன் கொடுமையை அழுத்தமாகப் பதிவு செய்யாமல் விட்டு விட்டார்கள்.

அறிமுக இயக்குனர் பிரையன் பி. ஜார்ஜ் புதிய கதை ஒன்றைச் சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் ‘கூர்மன்’ திரைப்படம் கூர்மை.
குறைவுதான்.

Read Also  வாட்ச்மேன் - திரை விமர்சனம்