நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் மீது காவல் ஆணையரிடம் நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
சென்னை 28 மே 2021
நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் மீது காவல் ஆணையரிடம் நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி. நாடோடிகள், படத்தில் அறிமுகமானவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி. நாடோடிகள், படத்தில் அறிமுகமானவர்,
2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு ஆபாச படங்களைக் காட்டி மிரட்டுகிறார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது.
அதனையொட்டி தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டது.
அப்போது முதல் மணிகண்டன் ஓரம் கட்டுப்பட்டு இருந்தார்.
தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட மணிகண்டனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்.
கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை மிரட்டுகிறார்.
என்னை முன்னாள் அமைச்சரான மணிகண்டன் பாலியல் வன்புணர்ச்சி செய்தார்.
பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தொடர்பில் இருந்ததார். 5 ஆண்டுகள் தொடர்பில் இருந்தபோது, ஆபாச புகைப்படங்களை அவர் எடுத்து வைத்திருந்தார்.
தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார்.

எனவே எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.