மீண்டும் தனது இரண்டாவது கணவர் மீது சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த ராதா காவல் துறையில் புகார்..!

சென்னை 04 ஜூலை 2021

மீண்டும் தனது இரண்டாவது கணவர் மீது சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த ராதா காவல் துறையில் புகார்..!

காவல்நிலையத்தில் ஒன்றாக வாழ்வதாக கூறிவிட்டு இப்போது மிண்டும் கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில் முரளி வடிவேலு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி திரைப்படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

நடிகை ராதாவுக்கு இந்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக திரைப்படமாக அமைந்தாலும் இதை தொடர்ந்து தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

அதன் பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் இரண்டாவது கணவர் சப் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த ஓராண்டுக்கு மேல் சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் என்று சொல்லும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தினம் தினம் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மீண்டும் சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்நடிகை ராதா.

நடிகை ராதா காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில்
கொடுத்த புகாரில்..

கடந்த மே மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எனது கணவரான காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன்.

ஆனால் அந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.

இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார்.

ஆனால் தற்போது மீண்டும் என்னை தினம் தினம் அடித்து கொடுமை படுத்துகிறார்.

என்னை பற்றி புகார் கொடுத்தால் என்ன செய்ய முடியும்..?

என கொலை மிரட்டல் விடுக்கிறார்.

உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி மிரட்டி வருகிறார்.

காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளீர்கள்.

ஏன் இப்படி செய்கிறீர்கள்..?

என கேட்டால் தொடர்ந்து என்னை மிரட்டுகிறார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன்.

இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட போது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை என்பது தெரியவந்தது.

சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!