இந்தியாவிலேயே முதல் முறையாக ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி குமரன் மருத்துவமனை – ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவர் குழு சாதனை.!

சென்னை 12 ஏப்ரல் 2022 இந்தியாவிலேயே முதல் முறையாக ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி குமரன் மருத்துவமனை – ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவர் குழு சாதனை!

சென்னை, ஏப்.12– 2022: கடுமையான மாரடைப்பு காரணமாக, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்த 61 வயது பெண்ணுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக குமரன் மருத்துவமனை – ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவர் குழு ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளது.

இந்த சிகிச்சை முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

தமிழகத்தில் அதிக வயதான பெண் ஒருவருக்கு இந்த முறையிலான சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பது என்பது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும்.

பேராசிரியர் அஜித் அனந்தகிருஷ்ண பிள்ளை மற்றும் டாக்டர் சித்தார்த்தன் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருந்த சூழ்நிலையில் மிகவும் ஆபத்தான இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றியது.

இந்த சிகிச்சையை மருத்துவர்கள் குழு 120 நிமிடங்களுக்கு மேல் செய்தது.

இதற்கு பிறகு, நோயாளி நன்கு குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த 61 வயதான சரளா என்ற பெண் கடுமையான நெஞ்சு வலி காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்த நிலையில் அவரது வயது காரணமாக, அவரது ரத்தக் குழாயில் அதிக கால்சியம் படிந்திருந்ததால் அவருக்கு வழக்கமான ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்படவில்லை.

மாறாக அவருக்கு ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சிகிச்சை மேற்கொள்வது என்று மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.

அதன்படி ரோட்டோபிளேட்டர் கருவியுடன் பொருத்தப்பட்ட வடிகுழாயை அடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக உட்செலுத்தி ரத்த ஓட்டத்துடன் பாதுகாப்பாக செல்லக்கூடிய சிறிய துகள்களாக அந்த கால்சியம் படிமங்கள் உடைத்து தூளாக்கப்பட்டன.

இந்த கருவி 150,000 ஆர்பிஎம் வேகத்தில் சுழலுக்கூடியதாகும்.

இந்த சிகிச்சை முறை குறித்து நுண்துளையீட்டு இருதயநோய் நிபுணரும் மூத்த ஆலோசகருமான பேராசிரியர் அஜித் அனந்தகிருஷ்ண பிள்ளை கூறுகையில்,

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறை, ரத்த நாளங்களில் அதிக அளவு சேர்ந்துள்ள கால்சியம் படிமங்களை பாதுகாப்பான முறையில் நீக்கும் நவீன தொழில்நுட்ப முறையாகும்.

Read Also  Chennai Apollo Hospitals in Chennai becomes the first hospital in India to have performed Robot-Assisted Cardiac Surgery on a 93 year old patient.!

குமரன் மருத்துவமனையில் சமீபத்தில் துவங்கப்பட்ட நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திலான ஹைப்ரிட் கேத் லேப் மூலம் நோயாளிக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.