இந்தியா முழுமையும் வெற்றிப்படமாக வளம் வரும் கே.ஜி.எஃப்: சேப்டர்- 2, அமேசான் பிரைம் வீடியோவில் ரூ.199க்கு ‘முன்கூட்டிய அணுகலாக’ இப்போது வாடகைக்குக் கிடைக்கிறது!
சென்னை 17 மே 2022 இந்தியா முழுமையும் வெற்றிப்படமாக வளம் வரும் கே.ஜி.எஃப்: சேப்டர்- 2, அமேசான் பிரைம் வீடியோவில் ரூ.199க்கு ‘முன்கூட்டிய அணுகலாக’ இப்போது வாடகைக்குக் கிடைக்கிறது!
பிரைம் வீடியோவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘மூவி வாடகைகள்’ மூலம் டிஜிட்டல் சந்தா பிரிவில் வெளிவருவதற்கு முன், மே 16 முதல், K.G.F தொடர் சித்திரத்தின் முன்கூட்டிய அணுகலை ரசிகர்கள் பெறலாம்.
பிரைம் உறுப்பினர்களும், இதுவரை பிரைம் உறுப்பினராக இல்லாத எவரும், பிரைம் வீடியோவின் பொழுதுபோக்கு மார்கெட் பிளேஸ் விரிவாக்கமான மூவி ரெண்டல்ஸ் மூலம் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கான முன்கூட்டிய அணுகலை அனுபவிக்கலாம்.
ஹோம்பேல் பிலிம்ஸின் விஜய் கிரகந்தூர் தயாரித்து, பிரசாந்த் நீல் இயக்கித்தில், சூப்பர் ஸ்டார் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், அர்ச்சனா ஜோயிஸ், அனந்த் நாக், ராமச்சந்திர ராஜு மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள கே.ஜி.எஃப்: சேப்டர்\- 2, உட்பட பிறவற்றையும் காணலாம்.
மும்பை, இந்தியா— 16 மே, 2022— வெற்றித் திரைப்படமான – கே.ஜி.எஃப்: சேப்டர்-2 இப்போது இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமான அமேசான் பிரைம் வீடியோவில் வாடகைக்குக் கிடைக்கிறது. K.G.F தொடரின் ரசிகர்கள், பிரைம் வீடியோவில் மூவி ரெண்டல்ஸ் வசதி மூலம் டிஜிட்டல் சந்தாவுக்கு முன்னரே பிளாக்பஸ்டர் திரைப்படத்திற்கான முன்கூட்டிய அணுகலைப் பெறலாம். திரைப்பட ஆர்வலர்கள் – பிரைம் உறுப்பினர்கள் மற்றும் இதுவரை பிரைம் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் என அனைவரும் இன்று முதல பிரைம் வீடியோவில் INR 199-க்கு திரைப்படத்தை வாடகைக்கு எடுக்கலாம் மற்றும் இந்த வெற்றிப் படத்தை தங்கள் வீடுகளில் இருந்தபடியே அனுபவிக்கலாம். கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் HD தரத்தில் வாடகைக்குக் கிடைக்கும். கே.ஜி.எஃப்: சேப்டர்-2 தவிர சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களையும், உலகம் முழுவதிலுமிருந்து பிரபலமான திரைப்படங்களின் (விருது வென்றவர்கள் மற்றும் உரிமையாளர்கள்) சிறந்த பட்டியலில் இருந்தும் திரைப்படங்களை வாடகைக்கு எடுக்கலாம்.
2018-இல் வெளியான கே.ஜி.எஃப்: சேப்டர் 1-இந் தொடர்ச்சியான கே.ஜி.எஃப்: சேப்டர் 2 ராக்கியைப்யின் அடுத்த கட்டத்தை விவரிக்கிறது. அவருடைய பெயர் இப்போது கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸில் அவரது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் சவாலற்ற ஆதிக்கம் பெற ராக்கி அனைத்து தரப்பிலிருந்தும் எழும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட வேவேண்டிய நிலையும் உள்ளது. யாஷ் முண்ணனி கதாபாத்திரமாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், அர்ச்சனா ஜோயிஸ், அனந்த் நாக், ராமச்சந்திர ராஜு மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கிய, கே.ஜி.எஃப்: சேப்டர் 2 திரைப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.
பிரைம் வீடியோவில் அறிமுகமாகும் மூவி ரெண்டல்ஸ் பொழுதுபோக்கு மார்க்கெட் பிளேசில் புதிய நீட்டிப்பாக உருவெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே, தியேட்டரில் காண்பது போன்று திரைப்படங்களை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பை இது வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், டிஜிட்டல் சந்தாதாரர்கள் காணும் முன்பே, சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச ஹிட் திரைப்படங்களுக்கான அணுகலைப் பெறலாம். கூடுதலாக, பிரைம் வீடியோவில் மூவி ரெண்டல்ஸ் வசதியுடன் பிரைம் சந்தாவுடன் கிடைக்கும் தலைப்புகளுக்கு அப்பாற்பட்டதேர்வை அதிகரிக்கிறது.
பிரைம் வீடியோவில் கே.ஜி.எஃப்: சேப்டர் 2 திரைப்படத்தை INR 199 மேட்டுமே செலுத்தி வாடகைக்கு எடுக்க முடியும். பிரைம்வீடியோ.காம் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட்-டிவிகள், இணைக்கப்பட்ட STBகள் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக் ஆகியவற்றில் உள்ள STORE டேப் மூலம் ரெண்டல் இலக்கை அணுகலாம். பிளேபேக் தொடங்கப்பட்டவுடன் படத்தைக் கண்டு முடிக்க வாடிக்கையாளர்கள் 48 மணிநேர கால அவகாசம் பெறுவார்கள். பரிவர்த்தனை தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் படத்தைப் பார்க்கத் தொடங்கலாம்.











