தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் ‘அண்ணா’ எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை வெளியிடப்பட்டது.!

சென்னை 21 ஜூன் 2022 தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் ‘அண்ணா’ எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை வெளியிடப்பட்டது.!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னணி தமிழக திரை உலக நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோரைப் பற்றி பாடல்களை எழுதி, இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் ‘சிறந்த பாடலாசிரியர்’ என கொண்டாடப்படுபவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின்.

“நான்” திரைப்படத்தில் “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடலின் மூலமாக நடிகர் விஜய் ஆண்டனி அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இவர் தற்போது தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அண்ணா’ எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தளபதி விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுயாதீன பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலை யு.கே மாலா குமார் படைப்பகம் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது.

இந்த வீடியோ வடிவிலான இந்த இசை பாடல் வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தளபதி விஜய்யின் ‘அண்ணா’ பாடலை கவிஞர் அஸ்மின் எழுத, ஈழத்து பாடகர் கஜீபன் செல்வம், பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலுக்கு சிந்துஜன் வெற்றிவேல் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பை கதிர் ராஜசேகரன் மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

யு கே மாலா குமார் படைப்பகம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த சுயாதீன பாடலின் வீடியோ இசை ஆல்பம் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு இந்த சுயாதீன பாடலின் வீடியோ இசை ஆல்பத்தை வெளியிட்டு வைத்தார்கள்.

‘அண்ணா’ குறித்து பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் பேசுகையில், “

‘அண்ணா’ என்பது தமிழகத்தின் திராவிட அரசியலிலிருந்து பிரிக்க இயலாத உணர்வுடன் கூடிய சொல்.

‘அண்ணா’ என்பது உடன்பிறந்த உறவைக் குறிக்கும் உயர்ந்த சொல்.

இந்த பாடலில் இளைய தளபதி விஜய் அவர்களை ரசிகர்களான தமிழக தமிழர்கள், இந்திய தமிழர்கள், ஈழத் தமிழர்கள், உலக தமிழர்கள் என சர்வதேச அளவிலான தமிழர்களின் பார்வை இந்தப் பாடலில் வரிகளாக இடம்பிடித்திருக்கிறது.

விஜய்யை திரையில் தோன்றும் கதாபாத்திரத்தின் ஊடாக ரசிக்கும் ரசனையையும், நிஜவாழ்க்கையில் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் மீது கொண்டிருக்கும் பேரன்பையும் சம அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய வரிகளின் ஊடாக துள்ளலிசையுடன் இந்தப்பாடல் உருவாகியிருக்கிறது.

Read Also  பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான புதிய ஆஃப் Reto தமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto - நடிகை இந்துஜா வெளியிட்டார்.

தளபதி விஜயின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக யு.கே மாலா குமார் படைப்பகம் சார்பில் வெளியாகியிருக்கும் ‘அண்ணா’ சுயாதீன பாடல் ஒப்பற்ற பரிசாக- கொண்டாடவேண்டிய பாடலாக அமைந்திருக்கிறது.

இந்தப் பாடலுக்கான காட்சிகளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடன கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.”

இலண்டனில் வாழும் தொழிலதிபரும், சமூக சேவையாளருமான மாலா குமார் தனது “யு கே மாலா குமார் படைப்பகம்” ஊடாக தமிழ் சினிமாவில் கால் பதித்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க இருக்கின்றார்.

ஆர்வமுள்ள இயக்குனர்கள் மாலா குமார் படைப்பகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அஸ்மின் தெரிவித்தார்.

விஜயின் புகழையும், சேவையையும் பாராட்டி போற்றி வெளியாகியிருக்கும் ‘அண்ணா’ சுயாதீன பாடல் விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரை இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்பது உறுதி.

பாடல் தயாரிப்பு U.K.மாலாகுமார் படைப்பகம் இலண்டன்.

இசை: சிந்துஜன் வெற்றிவேல்.

பாடல் வரிகள் : கவிஞர் அஸ்மின்.

பாடகர்கள்: கஜீபன் செல்வம், ஸ்ரீநிதி.

படத்தொகுப்பு: கதிர் ராஜசேகரம்.

ஒலிக்கலவை: ஆர்.கே.சுந்தர், சுதர்சன் கிறிஸ்டியன்.

ஒளிப்பதிவு: ரெஜிசெல்வராஜா.

பாடல் வரிகள்

பல்லவி

நாம் என்ற வார்த்தைகொண்டு உயர்ந்தார் “அண்ணா” நாடெங்கும் வாழ்த்த நாளை ஜெயிப்பார் “அண்ணா”

வா நண்பா தமிழரெல்லாம் சேர்ந்தோமென்னா வாடாத வாழ்க்கை இங்கே தருவாரண்ணா..

அனுபல்லவி

அடிமை வாழ்வு போதும் போதும் இனிமே நடக்க இருக்கா ஏதும்…?

நாட்ட அழிச்சி கூறு போடும்.. நரிகள் கூட்டம் தெறித்தே ஓடும்…

ஊமையைப்போல்

நாமிருந்தா ஊர்செழித்து முன்னேருமா..?

பேரலைபோல் எழ மறந்தா பேரவலம் தொடரும் அம்மா..

சரணம்-01

தமிழா தமிழா பயந்து ஓடாதே… தலைவன் தலைவன் பிறந்தான் வாடாதே…

தடைகள் உடையும் துயரம் தூளாகும்.. தயங்கி நின்றால் விடிய நாளாகும்..

‘நாளைய தீர்ப்பு’ தந்தவன் பின்னே நாளைய தமிழகம் எழுந்து நிற்போமே…

நாடி நரம்பு உயிர் உணர்வெல்லாம் தளபதி விஜய்க்கே என்றுரைப்போமே..

கவலை யாவும் மறைந்து போக இளைய கலைஞன் எழுந்தான்..

எம்ஜியாரு ரஜினிபோல ஏழை மனதில் கலந்தான்..

தமிழன் தனது பெருமை மறந்து ஆளும் தகைமை இழந்தான்…

நமது தலைவன் வாகைசூட எழுமே எங்கள் இனந்தான்…

நாடறிந்த பலரிருந்தும் நமக்கெனவே இங்கே யாருமில்லை..

ஏழசனம் மாலையிட வந்தாரய்யா “எங்க வீட்டுப்பிள்ளை”.!

சரணம்-02

தலைவா நீதான் எங்கள் எதிர்காலம் கோட்டை வென்று போடு புதுக்கோலம்.

தமிழே தமிழே எங்கள் அடையாளம் ஒருநாள் தமிழும் இந்த உலகாளும்…

தமிழன் பெருமை தமிழன் உணர்ந்தால் உலகில் உலகில் அவன்போல் யாரு…?

எமக்குள் நாமே சண்டைகள் செய்தால்.. தொடரும் எங்கள் துயர் வரலாறு ..

Read Also  தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரானா தொற்றினால் காலமானார்.

கடந்தகாலம் கடந்துபோச்சு நடந்த கதைகள் விடுவோம்..

இன்று நாங்கள் இணைந்து நாளும் புதியவிதைகள் நடுவோம்

மக்கள் வாழ்வை சுரண்டுவோரை குப்பை மடுவில் இடுவோம்..

மானமுள்ள தலைவன் பின்னே போனால் உயர்வை தொடுவோம்..

மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும் அண்ணன் இன்றி நாங்கள் இல்லை ..

வா திரண்டு போர் தொடுப்போம் எம்மை வெல்ல இங்கு யாருமில்லை.