நடிகர் விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு மழை !

சென்னை 19 ஜூலை 2022 நடிகர் விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு மழை !

சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘ரெய்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

நடிகர் விக்ரம் பிரபு தேர்ந்தெடுக்கும் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்கள், திரைப்பயணத்தில் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன. அவரது முந்தைய படமான டாணாகாரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அடுத்ததாக வரவிருக்கும் ‘ரெய்டு’ திரைப்படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பிரபுவின் அட்டகாசமான தோற்றம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் அசத்தலான தலைப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

ரெய்டு திரைப்படத்தை கார்த்திக் இயக்குகிறார். S.K. கனிஷ்க், GK (எ) G.மணிகண்டன் தயாரிக்கிறார்கள்.
முதன்மை கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக வெள்ளைக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு & ஸ்ரீ திவ்யா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் குழு

பேனர்: ஓபன் ஸ்க்ரீன் பிக்சர்ஸ் & M ஸ்டுடியோஸ்
தயாரிப்பு: S.K. கனிஷ்க், GK (அ) ஜி.மணிகண்டன்
இயக்கம்: கார்த்தி
திரைக்கதை & வசனம்: இயக்குனர் முத்தையா
இசை: சாம் CS
DOP: கதிரவன்
எடிட்டர்: மணிமாறன்
கலை இயக்குனர்: வீரமணி கணேசன்
ஸ்டண்ட் மாஸ்டர்: K கணேஷ்
நடன இயக்குனர்: கல்யாண், பாபா பாஸ்கர், சந்தோஷ்
பாடல் வரிகள்: மோகன் ராஜன்
இணை இயக்குனர்: மித்ரன் கார்த்தி
ஸ்டில்ஸ்: முருகன்
ஆடை வடிவமைப்பாளர்: மாலினி பிரியா
ஒப்பனை: வி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: கண்ணன் ஜி
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, சுரேஷ் சந்திரா, ரேகா D’One
வடிவமைப்புகள்: REDDOT பவன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: தம்பி M பூபதி
இணை தயாரிப்பாளர்: S.வினோத் குமார்