ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் நடிகர் தளபதி விஜய்க்கு ஐகோர்ட் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து.
சென்னை 13 ஜூலை 2021
ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் நடிகர் தளபதி விஜய்க்கு ஐகோர்ட் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து.
கடந்த 2012ல் தளபதி நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை வாங்கினார்.
இதற்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டும்.
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் ஆனால் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் தளபதி விஜய் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் நான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்று மனுவில் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் நாட்டை ஆளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் தளபதி நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.
ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.
ரியல் ஹீரோ வாக இருக்க வேண்டும்.
வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு எனவும் உயர் நீதிமன்றம் நடிகர் தளபதி விஜய் மீது காட்டமாக தெரிவித்துள்ளது.
சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இது போன்ற வரியைப் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத் துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.











