நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதால் நடிகை ஜூஹி சாவ்லாவுக்குு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை 04 ஜூன் 2021
நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதால் நடிகை ஜூஹி சாவ்லாவுக்குு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது.
ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் நடிகை ஜூஹி சாவ்லா இதை எதிர்த்து வழக்கே தொடர்ந்துள்ளார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி ஹரி ஷங்கர் வேறொரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது.
அதேநேரம், 5ஜி தொழில் நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அத்தனையும் இந்தக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்றும், இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது என்றும் நடிகை ஜூஹி சாவ்லா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல் படுத்துவதற்கு எதிராக நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.











