காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ்!
சென்னை 11 ஆகஸ்ட் 2022 காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ்!இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ‘ டார்லிங்’ நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள்.
” எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், நமது தேசத்திற்கு பெருமை சேர்த்ததற்காகவும் அனைத்து சாம்பியன்களுக்கும் வாழ்த்துக்கள்.
விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நன்றி தெரிவித்து வாழ்த்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே அண்மையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான தேசபக்தியை மையப்படுத்திய ‘ ஹர் கர் திரங்கா..’ எனத் தொடங்கும் பாடலில் விளையாட்டுத்துறை மற்றும் திரையுலக துறையிலிருந்து ஏராளமான ஆளுமைகள் இடம்பெற்றனர். அதில் பிரபாசும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் படத்திலும், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதி புருஷ்’ எனும் படத்திலும், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரசிகர்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடியும், அன்பு பாராட்டியும் மகிழ்ந்தார். நடிகர் பிரபாஸ்.!!!
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு.!!
நடிகர் பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி.!!
பல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித்குமார் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச் சென்றார்!
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்தின் டீசர் பிரபாஸ் பிறந்தநாளையொட்டி இன்று வெளியானது.
டி சீரிஸ் தயாரிப்பில் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’.
நடிகர் சிபிராஜின் மகன் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை ! *
நடிகர் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படம் வெளியிட்டு தேதி அறிவிப்பு!!
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? விரைவில் வெள்ளித்திரையில் விடை கூற வருகிறது.
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க நடிகர் பிரபாஸ் ரூபாய் நாலு கோடி அரசுக்கு நிவாரண நிதி வழங்கினார்.

