லால் சிங் சத்தா திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- அமீர்கான், ஷாருக்கான், கரீனா கபூர் கான், நாக சைதன்யா,மோனாசிங், மானவ் விஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அத்வைத் சந்தன்.
ஒளிப்பதிவு :- சத்யஜித் பாண்டே.
படத்தொகுப்பு :- ஹேமந் சர்க்கார்.
இசை :- ப்ரீதம் – தனுஜ் டிக்கு.
தயாரிப்பு :- அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் & வயாகம் 18 ஸ்டுடியோஸ்.
ரேட்டிங் :- 3.25 / 5.
ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ராபர்ட் செமெக்கிஸ் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளிவந்த பாரஸ்ட் கம்ப்’.
பல ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இநத பாரஸ்ட் கம்ப் திரைப்படம் 28 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை இந்திய ரசிகர்களுக்காக கொஞ்சம் கதையில் மாற்றம் செய்து ‘லால் சிங் சத்தா’வாக ஹிந்தியில் அமீர்கான் நடித்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.
லால் சிங் சத்தா திரைப்பட்த்தை ஹிந்தியில் இருந்து தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் என ஹிந்தித் திரைப்பட உலகத்தை சர்வதேச அளவில் பேச வைத்தவர் நடிகர் அமீர்கான்.
அவரது நடிப்பில் நான்கு வருடங்களுக்குப் பிறகு வந்துள்ள திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழு அளவில் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார் இயக்குனர் அத்வைத் சந்தன்.
கதாநாயகன் அமீர்கான் சிறுவயதிலிருந்தே நடக்க முடியாதவர் மற்றும் புரிதல் இல்லாதவர்.
சிறு வயது முதலே மற்றவர்களால் பைத்தியம், லூசு என அழைக்கப்படுபவர் கதாநாயகன் அமீர்கான்.
அவரது தாயார் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். பின்னர் கதாநாயகன் அமீர்கான் கதாநாயகி கரீனா கபூரை சந்திக்கிறார்.
சிறுவயதில் தாயை இழந்த கரீனா கபூர், பின் கதாநாயகன் அமீர்கான் வீட்டில் தங்க வருகிறாள்.
இருவரும் ஒன்றாகப் படிக்க பள்ளிக்குச் செல்கிறார்கள்.
கதாநாயகி கரீனா கபூர் ஒவ்வொரு செயலும் கதாநாயகன் அமீர்கானை மகிழ்விக்கிறது.
கதாநாயகி கரீனா கபூரும் அவரை ஊக்குவிக்கிறார்,
ஒரு சம்பவத்திற்குப் பிறகு கதாநாயகன் அமீர்கான் நடக்கவும், ஓடவும் கற்றுக் கொள்கிறார்.
ஆனால் புரிதல் மட்டும் கதாநாயகன் அமீர்கானிற்கு குறைவாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் கதாநாயகன் அமீர்கான், கதாநாயகி கரீனா கபூர் ஒவ்வொருவரின் கனவு வெவ்வேறு திசையில் பயணிக்கிறது.
கதாநாயகன் அமீர்கான், கதாநாயகி கரீனா கபூர் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் அமீர்கான், கதாநாயகி கரீனா கபூர் பிரிந்த இவர்கள் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இநத லால் சிங் சத்தாதிரைப்படத்தின் மீதிக்கதை.
இநத லால் சிங் சத்தா திரைப்படத்தில் அமீர்கான் கதையின் நாயகனாக மிகவும் அருமை நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அமீர்கான் இந்தி திரைப்படம் உலகில் மாஸ் கதாநாயகன் என்ற இமேஜை கொஞ்சம் கூட கவலைப்படாமல் அந்த இமேஜை ஓரம் தள்ளி வைத்து விட்டு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மிக கனகச்சிதமாக மாற்றிக்கொண்டு திரைப்படம் முழுவதும் லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கதாநாயகன் அமீர்கான் நடிப்பில் குழந்தைத்தனமாகவும் அப்பாவி தனமாகவும் திரைப்படம் பார்க்கும் நம்மளை சில இடங்களில் கண்கலங்க வைத்து விட்டார்.
இந்த திரைப்படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
திரைப்படம் முழுவதும் வரவில்லை என்றாலும் திடீர் திடீரென வந்து போகிறார் கதாநாயகி கரீனா கபூர்.
மாடலிங் செய்து, பாலிவுட் நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால், சினிமா ஆசையில் பாலிவுட் சென்று ஏமாந்து போய் ஒருவருக்கு ஆசை நாயகியாக வலம் வருகிறார் கதாநாயகி கரீனா கபூர்.
கதாநாயகி கரீனா கபூர் ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல் என தனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
ஒவ்வொரு முறையும் தனது கனவு நிறைவேறாத போது, களங்கும் இடம் அசத்தல். அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் கதாநாயகி கரீனா கபூர்.
கதாநாயகன் அமீர்கானுடன் ராணுவத்தில் பணியாற்றும் நாக சைதன்யா நடிப்பு மிக அருமை.
நாக சைதன்யா கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் இடம் பெற்று விடுகிறார்.
கதாநாயகன் அமீர்கானின் அம்மாவாக நடித்துள்ள மோனல் சிங் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 
இசையமைப்பாளர் பிரீதம் இசையில் தமிழ்ப் பாடல்களும், பின்னணி இசையும் ரிசிக்க வைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் சத்யஜித் பான்டே இந்தியாவின் பல பகுதிகளை தன் கேமராவில் மிக அழகாக பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் அத்சவத் சந்தன். இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் திரைக்கதையில் செய்திருக்கிறார்.
சாதாரண டிவி நடிகராக இருந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் ஷாருக்கானின் வளர்ச்சியை லால் சிங் சத்தாவின் வாழ்க்கை சம்பவத்தோடு இணைத்திருப்பது திரைப்படத்தின் கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘லால் சிங் சத்தா’ சிறப்பு.











