இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியீடு.
சென்னை 29 மே 2021
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியீடு.
துருவங்கள் 16′ திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் OTTயில் வெளியாக உள்ளது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் முவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு பைனான்ஸ் சிக்கலால், இன்னும் இந்த திரைப்படம் வெளிவராமல் உள்ளது.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது விலகிவிட்டார்.
இந்த நரகாசூரன் திரைப்படம்
பல முறை திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், எதுவுமே சுமுகமாக முடியவில்லை.
தற்போது, ‘நரகாசூரன்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விரைவில் இதன் வெளியிட்டு தேதி அறிவிக்க இருக்கிறார்கள்..