கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூபாய்.1.5 கோடி வழங்கினார்.
சென்னை 02 ஜூன் 2021
கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூபாய்.1.5 கோடி வழங்கினார்.
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்றின் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வரும் திரைப்படம் தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
கே.ஜி.எப் திரைப்படம் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர் நடிகர் யாஷ்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
இதற்காக அவர் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
இந்த தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து வழங்கப்பட உள்ளதாம்.
நடிகர் யாஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.











