உலக திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து விருதுகளை குவிக்கும் “யுத்த காண்டம்”.

சென்னை 15 ஆகஸ்ட் 2021 உலக திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து விருதுகளை குவிக்கும் “யுத்த காண்டம்”.

25 நடிகர்கள், 100 தொழில்நுட்ப கலைஞர்கள் , 50 இரவுகள் ஒத்திகை செய்து உருவாக்கப்பட்ட ‘இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி ‘யுத்தகாண்டம்’ பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ‘ஸ்வீடன் உலக திரைப்பட விழாவில் சிறந்த உலக திரைப்படத்திற்க்கான விருதை வென்றுள்ளது.

மேலும் கல்கத்தா சர்வதேச படவிழாவிலும், பூட்டான் சர்வதேச படவிழாவிலும், கோனா உலக திரைப்பட விழாவிலும் சிறந்த படத்திர்க்கான விருதை வென்றுள்ளது.

மேலும் பல படவிழாக்களில் திரையீடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா குருப், முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க யோக்ஜேப்பி, போஸ் வெங்கட், சுரெஷ் மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹரிசாய் இசையில், இனியன் ஜே ஹாரிஷ் ஒளிப்பதிவில், போஸ் வெங்கட் கதை திரைக்கதையில், ஆனந்தராஜன் இயக்கியுள்ளார்.. பேரடைஸ் சினிமாஸ் தயாரித்துள்ளது.