கதாநாயகன் ஆகும் ஆசையில் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்..?
சென்னை 24 ஆகஸ்ட் 2021
கதாநாயகன் ஆகும் ஆசையில் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்..?
பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமானவர் நடிகர் புகழ்.
இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அமேசான் ப்ரைமுக்காக நடிகர் புகழ் நடித்துள்ள ‘லொள்ளு’ சீரிஸ் புரோமோஷனுக்காக பங்கேற்றார்.
இவருடன் நடிகர் பவர்ஸ்டார் சினிவாசன் மற்றும் ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது நடிகர் புகழிடம் நீங்கள் கதாநாயகனாக நடிக்க ஆசை இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
“ஒரு காமெடியனாக இருந்து மக்களை சிரிக்க வைக்கனும்.
அதற்கு கதை தான் முக்கியம்.
ஸ்கிரிப்ட்டுக்கு தேவையானால் யாரு வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம்.
ஸ்க்ரிப்டில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். கதாநாயகனாக இருப்பது முக்கியமல்ல”
என இவ்வாறு புகழ் கூறியுள்ளார்.











