நடிகர் விமல் பொய் சொல்கிறார் மன்னர் வகையறா தமிழ்நாடு விநியோகஸ்தர் கங்காதரன் அறிக்கை.

சென்னை 29 ஆகஸ்ட் 2021நடிகர் விமல் பொய் சொல்கிறார் மன்னர் வகையறா தமிழ்நாடு விநியோகஸ்தர் கங்காதரன் அறிக்கை.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில வாரங்களாக சினிமாவில் நீண்டகாலமாக நீடித்து வந்த பல்வேறு சிக்கலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவுகளுக்கு கொண்டுவந்தனர்.

இந்த சூழ்நிலையில் எப்போதும் பிரச்சினைகளை எழுப்பி வந்த தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு எதிராக நடிகர் விமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிங்காரவேலன் மற்றும் இருவர் மீது 420 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

மன்னர் வகையறா திரைப்படத்தை 8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு என்னிடம் குறைவான கணக்கு காண்பித்து ஏமாற்றி விட்டார்கள்.

என சிங்காரவேலனும் அவரது கூட்டாளிகளும் என நடிகர் நடிகர் விமல் புகார் மனுவில் கூறியிருப்பது பற்றி.

அப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை பெற்ற கங்காதரன் அப்படத்தின் வியாபாரத்தில் என்ன நடந்து என்பதையும், என்னையும் நடிகர் விமல் ஏமாற்ற திட்டம் போட்டிருப்பாரோ என விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுருக்கிறார் அதில்

நடிகர் விமல் அவர்கள் பைனான்சியர் கோபி மீதும் அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதும் கொடுத்துள்ள மோசடி புகார் குறித்து மன்னர் வகையறா படத்தின் விநியோகஸ்தர் என்ற முறையில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மன்னர் வகையறா படத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதால் அந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் விமலிடம் பேசி ரூ.3 கோடிக்கு வியாபாரம் பேசி ரூ.1.5 கோடி MG ஆகவும், மீதி ரூ.1.5 கோடி திருப்பித்தரக்கூடிய டெபாசிட் எனவும் ஒப்பந்தம் செய்தோம்.

மன்னர் வகையறா இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ஒப்பந்தம் செய்து முன் பணமாக ரூ. 1 கோடியை நடிகர் விமலிடம் கொடுத்தேன்.

மீதி இரண்டு கோடியை மன்னர் வகையறா ” பட வெளியீட்டிற்கு முதல் நாள் தருவதாக கூறியிருந்தேன்.

மன்னர் வகையறா பட வெளியீட்டிற்கு முன்பு நடிகர் விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்த மதுரை அன்பு, அழகர், LMM முரளி, அல்தாப், மற்றும் நடிகர் விமல் செட்டில் செய்ய வேண்டிய சுரபி மோகன் ரூ 1.1 கோடி ரூபாயை செட்டில் செய்தல் மட்டுமே மன்னர் வகையறா படம் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறிவிட்ட காரணத்தால் விமலுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2 கோடியும், ரூ 1.1 கோடியை விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பில் செலுத்தும்படி நடிகர் விமல் கூறிவிட்டார்.

மீதி பணம் 90 லட்சத்தில் ரூ.35 லட்சத்தை டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களுக்கு செலுத்திவிட்டு மீதி தொகை ரூ.55 லட்சத்தை நடிகர் விமலிடம் ஒப்படைத்துவிட்டேன்.

அந்த பணத்தை வைத்து TV , Paper, Poster, Vinyl மற்றும் Fefsiக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை என நடிகர் விமலால் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது.

சேட்டிலைட் உரிமையை பெற்ற Zee Network நிறுவனம் படத்தை ஒளிபரப்பிய பின்னரே பணம் தரப்படும் என கூறிவிட்டது.

இதன் காரணமாக படத்தின் பைனான்சியர் கோபிக்கு செட்டில் செய்ய நடிகர் விமலிடம் பணம் இல்லை.

அதனால் கோபியிடம் இருந்து Lab Clearance பெற முடியவில்லை.

Lab Clearance இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்பதால், படத்தின் ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையும், நடிகர் விமலையும் அழைத்து கொண்டு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சென்றோம்.

பணம் செட்டிலாகாமல் கோபியிடமிருந்து Lab Clearance எப்படி வாங்க முடியும் என்று கேள்வி கேட்ட சிங்காரவேலன் கையை பிடித்து கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு நடிகர் விமல் கெஞ்சியது என் கண்களில் அப்படியே நிற்கிறது.

அப்போது அனைத்து விநியோகஸ்தர்களும் என்னுடன் இருந்தனர்.

கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அடுத்தடுத்த படத்தில் நடித்து அந்த சம்பளத்தில் இருந்து தந்துவிடுவதாக நடிகர் விமல் கூறியதையடுத்து, கோபியிடம் எடுத்து சொல்லி, சிங்காரவேலன் உத்தரவாதம் அளித்ததையடுத்து கோபியிடமிருந்து Lab Clearance வந்தது.

ஆனால் இதையெல்லாம் மறந்தும், மறைத்தும் தனக்காக இரக்கப்பட்டவர்கள் மீதே மோசடி புகார் கொடுத்த நடிகர் விமல் போன்றவர்களால் தான் சினிமாவுக்கு பைனான்ஸ் தர பைனான்சியர்கள் பயப்படுகிறார்கள்

பல சோதனைகளை தாண்டி மன்னர் வகையறா படம் வெளிவந்ததும் அந்த படம் ரூ 1.3 கோடி அளவில் தான் வசூல் செய்தது.

எனவே நான் கொடுத்திருந்த டெபாசிட் தொகையை திருப்பித் தர கேட்டு பலமுறை நடையாய் நடந்து வருகிறேன்.

ஆனால் நடிகர் விமலிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை.

தற்போது நடக்கின்ற விஷயங்களை பார்த்தால் கோபி மற்றும் சிங்காரவேலன் ஆகியோரை ஏமாற்றியதை போல என்னையும் ஏமாற்றி விடுவாரோ ? என்று அச்சமாக உள்ளது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற வாக்கியங்கள் தான் என்னை தைரியமாக வைத்திருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளர் விநியோகஸ்தர் கங்காதரன்.

error: Content is protected !!