ஏழாவது முறையாக கூட்டணி அமைக்கும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்.
சென்னை 07 செப்டம்பர் 2021 ஏழாவது முறையாக கூட்டணி அமைக்கும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்.
கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன.
இந்த கூட்டணியில் இது ஏழாவது படமாகும். இதற்க்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா II வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற வெற்றிப்படங்களை கூட்டாக இவர்கள் தயாரித்துள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தை கிராமிய நகைச்சுவை படமான அண்டாவ காணோம் புகழ் வடிவேலு இயக்குகிறார்.
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ஜாங்கோ உள்ளிட்ட திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாள்கிறார்.
நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.