நான் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகர் விஜய் சேதுபதி கிடைத்திருக்க மாட்டார் பாய்ஸ் நடிகர் மணிகண்டன்.
சென்னை 07 செப்டம்பர் 2021 நான் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகர் விஜய் சேதுபதி கிடைத்திருக்க மாட்டார் பாய்ஸ் நடிகர் மணிகண்டன்.
நான் மட்டும் ’தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகர் விஜய் சேதுபதி என்ற அருமையான நடிகர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார் என ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் பாய்ஸ்.
இந்த திரைப்படத்தில் நடிகர் நடகர் சித்தார்த், நடிகர் நகுல், நடிகர் பரத் நடிகர் மணிகண்டன் நடிகர் விவேக் இசையமைப்பாளர் தமன் நடிகை ஜெனிலியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த திரைப்படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக நடித்தவர்தான் நடிகர் மணிகண்டன்.
இந்நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.
அதில் அவர் தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும், வாழ்க்கை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதைப்பற்றி நினைத்து நான் கவலைப்படவும் இல்லை.
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததும் எல்லாம் தானாக வந்துவிடும் என்று நான் கொஞ்சம் திமிராக இருந்துட்டேன்.
ஆனால், நான் இப்ப திரைப்படத்துக்காக அலையும் போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதுமட்டும் இல்லாமல் காதல், தென்மேற்கு பருவக்காற்று, சூது கவ்வும் போன்று நிறைய திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து. ஏதோ சூழ்நிலை காரணமாக கை விட்டுப்போச்சு.
குறிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ’தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லை என்றும் அதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் ’நல்ல வேளை நான் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றும்.
அந்த திரைப்படத்தில் நான் நடித்து இருந்தால், நடிகர் விஜய் சேதுபதி என்ற அருமையான நடிகர், தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார் என்றும் அவர் மிக அருமையாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி என்றும் கூறினார்.
நான் திரைப்படம் கிடைக்கலைன்னும், சம்பாதிக்க முடியலைனும் என்று நான் கவலைப்பட்டதில்லை.
நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன்.
நாங்கள் எங்கள் வீடு வாடகைக்கு விட்டிருக்கும் அதில் வரும் வருமானத்தை வைத்து எங்க லைஃப போகுது என்று கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியுடன் மணிகண்டன் பேசியது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகர் விஜய் சேதுபதி, நான் மணிகண்டன் பேசிய பேட்டியை பார்த்தேன்.
அந்த பேட்டி மிகவும் கூலாக இருந்தது அந்தப் பேட்டியின் டிரெய்லரை பார்த்த போது அவர் ஏதோ கஷ்டப்படுகிறார் என்பது போலத்தான் இருந்தது.
நான் கூட ஐயோ ஏதோ கஷ்டப்படுகிறார் போல என்றுதான் நினைத்தேன்.
ஆனால், பேட்டியை பார்த்த போது அவர் மிகவும் கூலாக கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு மிகவும் ஜாலியாக தான் இருந்தார்.
அவரது பேட்டியை பார்ப்பது நன்றாக இருந்தது.
எனக்கு தெரிந்து மணிகண்டன் மீண்டும் பிஸியாகி விடுவார் என்பதை நான் நம்புகிறேன்.
இப்போ பார்ப்பதற்கே ஆள் நன்றாக இருக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்காக நானே போட்டோ அனுப்பி இருக்கிறேன் என்று கூறி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி .