தளபதி 65 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.
சென்னை 07 ஜூன் 2021
தளபதி 65 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்தில் பிரபல நடிகர் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.
தளபதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது.
இந்த படப்பிடிப்பில் சுமார் 25 முதல் 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதில் தளபதி நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ’தளபதி 65’ திரைப்படத்தில் யோகி பாபு நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரே சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’தளபதி 65’ திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.











