காமிக்ஸ்டான் செம் காமெடிப்பா போட்டியாளர் அபிஷேக் குமார் மிஸஸ். ஜானகி கதாப்பாத்திரமாக உங்களை ஆச்சரியப்படுத்த வருகிறார்.

மிஸஸ். ஜானகி என்கிற தனது நகைச்சுவை கதாபாத்திரத்தால் பிரபலமான சென்னையை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் அபிஷேக் குமார், அமேசான் ப்ரைம் ஒரிஜினல் தொடரான ஸ்கிரிப்ட் செய்யப்படாத காமிக்ஸ்டான் செம காமெடிப்பா, தமிழ் வெர்ஷனில் விரைவில் தோன்றப் போகிறார். செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள இந்நிகழ்ச்சியில், தங்களுக்கான நகைச்சுவைக் களத்தில் பிரபலமான, தமிழின் மூன்று முன்னணி நகைச்சுவை கலைஞர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம் ஆகியோர் ஆலோசகர்களாக இருந்து தமிழ் ஸ்டேண்ட்-அப் காமெடியின் ராஜா அல்லது ராணியை தேர்ந்தெடுப்பார்கள்.

நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன், போட்டியாளரும் பிரபல நகைச்சுவை கலைஞருமான அபிஷேக் குமார் நகைச்சுவை கதாப்பாத்திரமான மிஸஸ். ஜானகியோட சேர்ந்து அவர் செய்யப்போகிற காமெடி கலாட்டாவின் முன்னோட்டத்தை உங்களுக்கு காட்டப்போகிறார். சென்னை பள்ளி ஆசிரியர்களைப் போல அபிஷேக்  பேசுவதும், அவரின் உடல் மொழியும் எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கும் படி இருக்கும். தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பற்றின தனது கருத்துக்களின் மூலம் ஏற்கனவே உள்ளூர் ஆசிரியை மிஸஸ். ஜானகி எல்லாரையும் கவர்ந்துவிட்டார். இப்போ அவங்க, தன்னோட வகுப்பறையில் காமிக்ஸ்டான் போட்டியாளர்களை சந்தித்து அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள தயாராகிட்டாங்க. ஒருவேளை நல்ல நகைச்சுவையை கொண்டுவர அவர்களுக்கு பாடம் கூட நடத்தலாம்.

ஒன்லி மச் லவ்டர் (ஓஎம்எல்) என்டர்டெயின்மென்ட் உருவாக்கத்தில் வெளிவரும், தமிழ் மொழியில் முதல் முதலாக வெளியிடப்படும் இந்த வகையான தொடரின் எட்டு-எபிசோடுகளும் ,அனைத்து எபிசோடுகளையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். வித்யுலேகா ராமன் மற்றும் மெர்வின் ரோசாரியொ சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். அற்புதமான புதிய ஸ்கிரிப்ட் செய்யப்படாத நகைச்சுவைத் தொடர், அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கப்படும்.

வீடியோவை இங்கே பாருங்கள்-

 

error: Content is protected !!