இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட “சிட்டா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – VAO அலுவலகச் சிரிப்பு கலாட்டா!

இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட “சிட்டா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – VAO அலுவலகச் சிரிப்பு கலாட்டா!

சென்னை 27 அக்டோபர் 2026 நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது ” சிட்டா ” இயக்குனர் பாலு நாராயணன் இயக்கியுள்ளார்.

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விருத்தாச்சலம் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் செந்தில்முருகன் தனது இரண்டாவது திரைப்படமாக தயாரித்துள்ள திரைப்படம் ” சிட்டா “

இந்தத் திரைப்படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

கிராம நிர்வாக அலுவலர் கதாபாத்திரத்தில் பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் நடித்த ஆதியா பிரசாத் சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகன் சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக மலையாளத்தில் வாழ – 2 திரைப்படத்தில் நடித்த ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார்.

கிராமத்து தலையாறியாகவே மாறியுள்ளார் பாலசரவணன், இயக்குனர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் ஒரு கிராமத்து அரசியல் குடும்பத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.

சத்தமின்றி அமைதியான வில்லனாக அருவி மதன் நடித்துள்ளார்.

இவர்களுடன் செந்தில் முருகன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!