நட்சத்திரம் நகர்கிறது ரேட்டிங் :- 2.5 / 5.
நடிகர் நடிகைகள் :- கலையரசன்,
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட் , சபீர் கல்லாரக்கல், ரட்சகன், ரெஜின் ரோஸ், தாமு ,
ஷெரின் செலின் மேத்யூ, வின்சு ரேச்சல் சாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதயசூர்யா, ஸ்டீபன்ராஜ்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பா. இரஞ்சித்.
ஒளிப்பதிவு :- கிஷோர் குமார்.
படத்தொகுப்பு :- செல்வா R.K.
இசை :- டென்மா.
தயாரிப்பு :- நீலம் புரொடக்ஷன்ஸ் -யாழி பிலிம்ஸ்.
ரேட்டிங் :- 2.5 / 5.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கான நல்ல நல்ல திரைப்படங்களை கொடுக்கும் பழைய புதிய இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
தங்களது எண்ணங்களை மட்டுமே நினைத்ததை பிரதிபலிக்கும் திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமான திரைப்பட ரசிகர்களைக் கவரும் ஒரு திரைப்படங்களாக இருந்தால் மட்டுமே பெருவாரியாக திரைப்பட ரசிகர்களிடம் பேசப்படும்.
இந்த திரைப்படத்தைத் தனது எண்ணங்களுக்கான ஒரு திரைப்படமாக மட்டுமே இயக்கியுள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.
தமிழ் திரைப்பட உலகில் சாதி மதம் மற்றும் அரசியல் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு
சாதி இல்லாமல் ஒரு நல்ல திரைப்படம் கொடுக்க முடியுமா இயக்குனர் பா.ரஞசிதால் கொடுக்க முடியுமா எனக்கு தெரியவில்லை.
புதுச்சேரியில் உள்ள ஒரு நாடகக் குழு ஒன்று இருக்கிறது.
அந்த நாடகக் குழு ஒரு நாள்
தங்களது புதிய நாடகத்தை அரங்கேற்றுவதற்காக அனைவரும் தயாராகிறார்கள்.
நாடகத்தை அரங்கேற்றுவதற்காக
பல பகுதிகளிலிருந்தும் நாடக கலைஞர்கள் வருகிறார்கள்.
கதாநாயகி துஷாரா விஜயன் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவரும்
பல வருடங்களாக மிகவும் நெருக்கமாகக் காதலித்து பிரிந்த காதல் ஜோடிகள் மற்றும் ஒரு ஆண் மற்றும் திருநங்கை காதல் ஜோடி, ஆண் ஆண் காதல் ஜோடி, பெண் பெண் காதல் ஜோடி, திடீரென முளைக்கும் காதல் ஜோடி அவர்களோடு மற்ற கலைஞர்களின் காதல் அனுபவம் என இப்படியான ஜோடிகளை இவர்களில் விதவிதமான காதல் ஜோடிகளும் நாடக குழுவில் வந்து சேருகிறார்கள்.
இவர்களை வைத்து ஒரு காதல் கதையை நாடகமாக அரங்கேற்ற அனைவரும் ஒத்திகை எடுக்கிறார்கள்.
கதாநாயகி துஷாரா விஜயன் – கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவரும் காதலித்து வந்தார்கள்.
ஒரு சிறு பிரச்சனையால் கதாநாயகி துஷாரா விஜயன் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவரும் பிரிவு ஏற்படுகிறது.
அதற்குப்பின், இந்த நாடகக்குழுவில் கதாநாயகி துஷாரா விஜயன் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவரும் எதிர்பாராத விதமாக ஒத்திகை நடிப்பு பயிற்சியின்போது இருவரும் ஒன்று சேர்க்கிறார்கள்.
அந்த பயிற்சியின்போது இருவரும் தாங்கள் எதற்காக பிரிந்தோம் என்று யோசிக்கிறார்கள்.
இவர்கள் இருவரையும் கதாநாயகன், கதாநாயகியாக வைத்து காதல் நாடகம் ஒன்றை நடத்த நாடகக் குழு முயற்சி செய்து வருகிறது.
இறுதியில் பிரிந்த கதாநாயகி துஷாரா விஜயன் கதாநாயகன் காளிதாஸ் இவர்கள் இருவரும் வைத்து அந்த நாடகம் நடைபெற்றதா? இல்லையா?
என்பதுதான் இநத நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
மற்றொரு நாயகனாக கலையரசன் நடித்துள்ளார்.
கலையரசனின் பிற்போக்கு தனமான நடிப்பு திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் கதாநாயகியாக
துஷஷாரா விஜயன் நடித்துள்ளார்.
தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் கதாநாயகி துஷாரா விஜயனின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக உள்ளது.
காதலித்துப் பிரிந்த காதல் ஜோடிகளாக கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம், கதாநாயகி துஷாரா விஜயன். இருவரது நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம், ஏட்டிக்குப் போட்டியாக நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.
கதாநாயகி துஷாரா விஜயன் கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
திரையில் அவரை ரசிக்க செய்துள்ளது.
நாடகக் குழு மாஸ்டராக ரெஜின் ரோஸ், வெளிநாட்டுப் பெண்ணைக் காதலிப்பவராக வினோத், யஸ்வந்திரவாக ஹரிகிருஷ்ணன், கற்பகம் அக்காவாக சுபத்ரா ராபர்ட், அய்யாதுரை ஆக ஞானபிரசாத், கலையரசன் விரும்பும் பெண்ணாக வின்சு ரேச்சல் சாம் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் ந நடித்திருக்கும் அனைவரும் குறிப்பிட வேண்டியவர்கள்தான்.
தென்மாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ரங்கராட்டினம் பாடல் மற்றும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளது.
தென்மா இசையில் பாடல்களைத் தனியாகக் கேட்டால் இனிமையாக இருக்கும் போலிருக்கிறது.
படத்துடன் ஒன்றவில்லை. பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் இனிமையான சில பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்கிறது.
திரைப்படம் முழுவதும் இளையராஜாவைக் கொண்டாடும் வசனங்களும் அதிகமாக இருக்கிறது.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்திலும் வண்ணங்களை அதிகப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் குறைவான நகர்வு நாடகம் காதல்.











