தளபதியின் 65-வது திரைப்படத்தை இயக்கப் போவது நெல்சன் திலீப்குமார்..!
தளபதி 65 திரைப்படத்திற்கு இயக்குனர் அவர்தான் இயக்குவார் இவர்தான் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது தளபதி 65 இயக்கப்போகும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து விட்டது.
அந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார். 2018-ஆம் வருடம் நயன்தாரா, யோகிபாபுவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்னும் காமெடி கலந்த ஒரு வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தவர்.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அந்த டாக்டர் திரைப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடந்து வரும் நேரத்தில் தளபதி விஜய்யின் 65 வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்னதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்குவதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் சம்பளப் பிரச்சினை காரணமாகவும், கதையில் மாற்றத்தை தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை ஏற்க முடியாமல் ஏ.ஆர்.முருகதாஸ.
இந்த தளபதி 65 திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதால் அடுத்த இயக்குநரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
ஆனால் முழு கதையும் தயாராக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சன் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அவர் சொன்னக் கதை சன் பிக்சர்ஸுக்கு பிடித்துப் போனதால் அவர் விஜய்யை சந்திக்க வைக்கப்பட்டார்.
தளபதிக்கும் நெல்சன் திலிப்குமார் சொன்ன கதை பிடித்துப் போக.. அறிவிப்புக்காக இத்தனை நாட்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார் நெல்சன் திலிப்குமார்.
நேற்று வியாழக்கிழமை. சன் பிக்சர்ஸ் அவர்களின் விருப்பப்படியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தளபதி விஜய், இவர்களுடன் நெல்சனும் இருக்கும் படியான ஒரு வீடியோவை வெளியிட்டு தளபதி 65யை அறிவித்து விட்டார்கள்..!
தளபதி 65 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
#Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures @sunpictures . directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 @RIAZtheboss #moviewingz pic.twitter.com/I6NzwnE5Nl
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) December 10, 2020












