நேசிப்பயா’ படம் காதல், ஆக்ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன்!
நேசிப்பயா’ படம் காதல், ஆக்ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன்!சென்னை 10 ஜனவரி 2025 இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து கொண்டதாவது, “உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். அந்த ஒரு அனுபவத்தைத் தான் ‘நேசிப்பாயா’ படத்தில் பணிபுரிந்தபோது உணர்ந்தேன்.
படத்தை இறுதியாக பார்த்தபோது எங்களுக்கும் எங்கள் அணியினருக்கும் முழு திருப்தி இருந்தது. புதுமுக நடிகர் போல அல்லாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்.
இயற்கையாகவே அவருக்கு அற்புதமாக நடிக்கும் திறன் இருக்கிறது. அதிதி ஷங்கர் பணிபுரிவதற்கு மிகவும் இலகுவானவர்.
எனது பார்வையை அழகான காட்சிகளாக மொழிபெயர்த்த ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் மற்றும் சண்டை பயிற்சி குழுவினருக்கு எனது சிறப்பு நன்றி. எனது தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் சினேகா பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி. ’நேசிப்பயா’ படம் காதல், ஆக் ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
தொழில்நுட்ப குழு:
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
Related posts:
கள்வன்’ படம் அட்வென்ச்சர், ஆக்ஷன், நகைச்சுவை, எமோஷனல் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும்- இசையமைப்பாளர்- நடிகர் ஜிவி பிரகாஷ் குமார்!
பிளான் பண்ணி பண்ணனும்” குடும்பங்கள் கொண்டாடும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் !
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு !
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம்!!
பீட்சா 1′ கதையுடன் நேரடி தொடர்பு கொண்ட ‘பீட்சா 4’ திகில் மற்றும் திரில் நிறைந்த பரபர பயணமாக இருக்கும் என படக்குழு தகவல் !!
கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.!
வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!
ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும் !
ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்
“அன்பறிவு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் – இயக்குநர் அஷ்வின் ராம் !

