தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு.
தளபதி நடிகர் விஜய்யின் 64-வது படமான ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியீட செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது.
இந்த மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருப்பினும் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என படக்குழுவினர் திட்டவட்டமாக கூறினார்கள்.
இந்த திரைப்படத்தை வருகிற ஜனவரி 2021 பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழுவினர் தற்போது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதியை அறிவித்துள்ளனர்.
அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 மாதம் காத்திருப்புக்கு பின் மாஸ்டர் படம் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.











