நடிகர் ஜனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி இணைந்துள்ளார்.

சென்னை 21 மே 2021

நடிகர் ஜனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் ஜனகராஜ் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்த ஓர் திரைப்பட நடிகராவார்.

100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு போட்டியாக இருந்தவர்.

ஒரு பன்முக கதாபாத்திரங்கள் புரியும் கலைஞர் என்று நடிகர் ஜனகராஜை என்று கூட சொல்லலாம்.

1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 – 1977 ஆண்டுகளில் இயக்குனர் கைலாசம் கே.பாலச்சந்தர் அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார்.

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஜனகராஜ்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், புரட்சி கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் ஜனகராஜ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து நடிகர் சாருஹாசனுடன் இணைந்து தாதா 87 திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகர் ஜனகராஜ் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.

அவர் தனது 66-வது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

மேலும் அவரை டுவிட்டரில் பாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் குறைந்த பிறகு அவர் மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவர் ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர் ஜனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி இணைந்துள்ளதாகவும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும் பலருக்கும் இது உண்மையில் ஜனகராஜின் ட்விட்டர் ஐடி தானா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் நடிகர் ஜனகராஜ் பிறந்த நாளில் ட்விட்டர் கணக்கு தொடங்கியதாக அறிவித்த இந்த ட்வீட்டை பகிர்ந்த நடிகர் ஷாந்தனு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.

https://twitter.com/imKBRshanthnu/status/1395282465887981568?s=19

https://twitter.com/ActorJanagaraj/status/1395001647496060931?s=19

error: Content is protected !!