டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ !!
டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ !!கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார்.
திரைப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.
ஹைபர் லிங்க் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் பிரசாத் முருகன் படம் பற்றி கூறும்போது, “மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்து கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன்.
காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.
வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்” என்று கூறியுள்ளார்..
வரும் டிசம்பரில் இந்தப்படத்தை திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்கம் ; பிரசாத் முருகன்
வசனம்-பாடல்கள் ; ஜெகன் கவிராஜ்
இசை ; ஜோஸ் ப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு ; காளிதாஸ் மற்றும் கண்ணன்
படத்தொகுப்பு ; ‘ராட்சசன்’ புகழ் சான் லோகேஷ்
கலை இயக்குநர் ; நட்ராஜ்
சண்டைக்காட்சிகள் ; சுகன்
ஆடை வடிவமைப்பு ; ரிஸ்வானா
லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர்
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: KSK செல்வகுமார்
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்
மக்கள் தொடர்பு ;; KSK செல்வா, மணி மதன்..
Related posts:
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ !
கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் விரைவில் திரையில் !!
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் ‘டைம் அப்’
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது.
ஆஸ்கர் விருதுகள் 2020 : பரிசை வென்றவர்கள் முழு விவரம்…
எனது 20 வருட சினிமா கேரியரில் இதுதான் பெஸ்ட் டைம் என்பேன்-நடிகர் சூர்யா
திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் களைகட்டுகிறது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர்.
டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.
ஜூனில் வெளியாகும் நடிகர் சமுத்திரகனியின் நடிப்பில் வெளியாகும் ‘விமானம்’ திரைப்படம்.!

