தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர்.
சென்னை 16 நவம்பர் 2021
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் பொதுக்குழு 14. நவம்பர் .2021 ஞாயிற்றுக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
நடந்த தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க பொதுக்குழுவில் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த பொதுக்குழுவில் 2022- 2024 க்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி நடக்க உள்ளது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் முற்போக்கு அணி மற்றும் செயல் வீரர்கள் அணி இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தை உருவாக்கிய ஐயா தெய்வத்திரு ரங்கராஜன் அவர்கள் நல்லாசியுடன் மற்றும் மறைந்த முன்னாள் நிர்வாகிகள்
ஐயா தெய்வத்திரு K.K.ரவி அவர்கள்
ஐயா தெய்வத்திரு இளங்கோவன் அவர்கள்
ஐயா தெய்வத்திரு சந்தான பாண்டியன் அவர்கள்
ஐயா தெய்வத்திரு ஆன்டனி சேவியர் அவர்கள்
இவர்கள் நல்லாசியுடன் களமிறங்கியிருக்கிறது செயல் வீரர்கள் அணி.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் செயல்வீரர்கள் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:-
தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு M.சேதுபாண்டியன்
பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு S.P.சாம்பசிவம்
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு R.ராம் பிரபு
துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு V.பாக்கியராஜ்
திரு R.நாகராஜன்.
துணை செயலாளர் பதவிக்கு மூன்று நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு S.ஹக்கீம்
திரு D சங்கர் என்கின்ற ரஞ்சித்
திரு P.தங்கராஜ்
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 11 நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு P.ஆறுமுகம் என்கின்ற ஆத்தூர் ஆறுமுகம்
திரு P.கோவிந்தராஜ்
திரு N.மகேந்திரன்
திரு K.R.பழனியப்பன்
திரு S.போத்தி சரவணமுத்து என்கின்ற நமஸ்காரம் சரவணன்
திரு ராஜா பக்கிரிசாமி
திரு R.E.ராஜேந்திரன்
திரு K.சக்திவேல்
திரு R.சிவக்குமார் என்கின்ற நிர்மல்
திரு K.வீரமணி என்கின்ற வீரா
திரு A.வேணு
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகி சங்கத்தின் நடக்கவிருக்கும் தேர்தலில் முற்போக்கு அணி சார்பாக 19 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெறும் இடம்
திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வடபழனி ( கமலா திரையரங்கம் அருகில் )
தேர்தல் நாள் 12. டிசம்பர் 2021.
தேர்தல் நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.











