சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படம்.

சென்னை : 27 டிசம்பர் 2020

தமிழ் திரைப்பட உலகில் இளம் நடிகையாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் நீச்சல் உடை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வைரலா பரவி வருகிறது.

தமிழ் திரைப்பட உலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்திலும் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.

அதன்பின்னர் நடிப்பதைத் தவிர நடிகை சாக்‌ஷி அகர்வால் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் சின்ட்ரெல்லா டெடி, புரவி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் எப்போதுமே சமூக வலைதளத்தில் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

உடற்பயிற்சி ரசிகர்களுக்கு அறிவுரை என வீடியோ கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை சாக்‌ஷி தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

‌விடுமுறைக்காக கோவா சென்று இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அங்கு இருக்கும் கடற்கரையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.