பாலிவுட் நடிகர் சல்மான் கான் பண்ணை வீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சென்னை : 27 டிசம்பர் 2020

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இந்தி திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில்தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.

இவர் 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மத்தியபிரதேசம் மாநிலம் உள்ள இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி பிறந்தார்.

இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார்.

தனது பிறந்தநாளையொட்டி நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.

அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து நடிகர் சல்மான் பிறந்தநாள் கேக்யை வெட்டி கொண்டாடினார்.

இவர தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.