பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!!
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!!
சென்னை 02 செப்டம்பர் 2023 ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்: படத்தின் பிரத்யேக போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து, மாஸான தோற்றத்தில் தோன்றுவது ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும்… அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும்.. ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.
‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படக்குழுவினர் தொடங்குகிறார்கள்.
இப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ராம் -லக்ஷ்மன் அமைக்கிறார்கள்.