பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்.
சென்னை 02 செப்டம்பர் 2023 அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது.
தற்போது அவருக்கு வயது 67
அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகளிர் மட்டும், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“தெய்வமே! நீங்க எங்கயோ போயிடீங்க சார்” என்ற அவருடைய காமெடி டயலாக் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது.
அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர் இயக்குனர் நடிகர் சந்தானபாரதியின் தம்பி ஆவார்.