பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு’ – ஜூலை 24ஆம் தேதி உலகமங்கும் பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயாராகிறது!
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு’ – ஜூலை 24ஆம் தேதி உலகமங்கும் பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயாராகிறது!சென்னை 24 ஜூன் 2025 மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உருவாகியுள்ள வரலாற்று அதிரடிப் படைப்பு ‘ஹரி ஹர வீரமல்லு’, தற்போது அதிகாரபூர்வமாக ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதில் ஆந்திரா மாநில துணை முதல்வரும், பவர் ஸ்டாருமான பவன் கல்யாண், தனது மாறுபட்ட தோற்றத்துடன் ஹீரோவாக களமிறங்குகிறார்.
இத்திரைப்படத்தை முக்கிய தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் வழங்க, ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
மேகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஏ.தயாகர் ராவ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
VFX, சவுண்ட் டிசைன் மற்றும் எடிட்டிங் பணிகளில், உலக தரத்தில் சினிமா அனுபவம் வழங்கும் நோக்கத்தில், இப்படக்குழு முழுமையாக ஈடுபட்டு செயல்பட்டு வருகிறது.
16ஆம் நூற்றாண்டு முகலாயக் கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு சக்திவாய்ந்த கதையை பதிவு செய்கிறது.
பவன் கல்யாண் இந்தப் படத்தில் துணிச்சலும், புரட்சியும் நிறைந்த ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.
நிதி அகர்வால், பாபி டியோல், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான மனோஜ் பரமஹம்ஸா மற்றும் ஞானசேகர் V.S. ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர்.
தோட்ட தரணி வடிவமைத்துள்ள பிரம்மாண்டமான செட்கள், பார்வையாளர்களை வசீகரிக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்படத்தின் மெகா ரிலீஸ், ‘ஹரி ஹர வீரமல்லு’ ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட நிகழ்வாக மாறவிருக்கிறது.











