பிரைம் வீடியோ தளபதி விஜய் நடித்த மாபெரும் அதிரடி  வெற்றிப்படமான – வாரிசு  தமிழ் படத்தின் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்தது .!!

சென்னை 18 பிப்ரவரி 2023 பிரைம் வீடியோ தளபதி விஜய் நடித்த மாபெரும் அதிரடி  வெற்றிப்படமான – வாரிசு  தமிழ் படத்தின் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்தது .!!

வம்ஷி பைடிபல்லி இணைந்து எழுதி இயக்கிய இந்த   மனநிறைவளிக்கும் குடும்ப பொழுதுபோக்குத்திரைப்படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத் குமார், ஷாம், பிரபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இந்தியாவிலும், உலகெங்கிலும் 240 நாடுகள் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் பிப்ரவரி 22 முதல் இந்தத் திரைப்படத்தை தமிழிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம் மற்றும் மொழிகளில்  டப் செய்யப்பட்டதையும் ஸ்ட்ரீம் செய்யலாம்.

 

வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய  தயாரிப்பு  வரிசை தேர்வுகளை   விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க  சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499   மட்டுமே உறுப்பினர்  சந்தா செலுத்துவதன் மூலம் கிடைக்கும்.  மேலும் நுகர்வோர்கள் வருடத்திற்கு ரூ. 599 சந்தா செலுத்துவதன் மூலம் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை  பெறலாம். இந்த மொபைலில் மட்டுமே காணக்கூடிய  தனிநபர் பயன்பாட்டு திட்டம் பிரைம் வீடிவின் ஒட்டுமொத்த திரைப்படப் பட்டியலிலுள்ள உயர்தரமான பொழுதுப்போக்கு திரைப்படங்களையும் மற்றும் நேரடி விளையாட்டுப் போட்டிகளையும் கண்டு மகிழ்வதற்கான அணுகலை வழங்குகிறது. 

மும்பை, இந்தியா – 17 பிப்ரவரி 2023 – பிரைம் வீடியோ இன்று தளபதி தளபதிவிஜய் (ThalapathyVijay) நடித்த மாபெரும் தமிழ் அதிரடி வெற்றிப்படமான  வாரிசு வின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்தது.    வம்ஷி பைடிபள்ளி  (Vamshi Paidipally) இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில்  ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), Pபிரகாஷ் ராஜ் (Prakash Raj), யோகி பாபு (Yogi Kumar), சரத் குர்மார் (Sarath Kumar), ஷாம் (Shaam), பிரபு (Prabhu), மற்றும்  மேகாஸ்ரீகாந்த்  (Meka Srikanth)  போன்ற மிக வலிமை வாய்ந்த ஒரு நட்சத்திரப்பட்டாளமே  முக்கிய வேடங்களில் நடித்திருப்பதை பறைசாற்றுகிறது. இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் பிப்ரவரி 22 முதல் வாரிசு திரைப்படத்தை தமிழிலும் மற்றும் இதன் டப் செய்யப்பட்ட  திரைப்படத்தை  தெலுங்கு, மலையாளம் மொழிகளில்  இந்த சேவையில்  ஸ்ட்ரீம் செய்யலாம்.

ஒரு கம்பீரமான செல்வச் செழிப்பு மிக்க பின்புலத்துடனான , வாரிசு திரைப்படத்தின் கதை,  குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், அதன் உறவுகளுக்கிடையே  அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகள்,  எவ்வாறு அந்த உறவுகளிடையேயான  உண்மையான வலிமையை சோதிக்கின்றன என்பதையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. அன்பு நிறைந்த ஒரு , கூட்டுக் குடும்பத்தின் தலைவரான , தொழில் அதிபர் – ராஜேந்திரன் (சரத் குமார்) தனது மூன்று மகன்களிடையே யார் தனக்குத்  தகுதியான வாரிசாக இருப்பார் என்பதை கண்டறியும்  முயற்சியில் தன்னையறியாமலேயே அவர்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கச்செய்கிறார்.. அவர்களில் முதல் இரண்டு மூத்த மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்) மற்றும் அஜய் (ஷாம்) எதிர்பாராத விதமாக பிளவை ஏற்ப்படுத்தும் அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்க்கையில் , இளைய மகன்- விஜய் (விஜய்) தனது குடும்பத்தை ஒன்றிணைத்து செல்லும் அதே வேளையில், தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் ஒரு ஒரு எதிரியின் பிடியில் இருந்தும் குடும்பத்தைப்  பாதுகாக்கிறார்

.

பிரைம் வீடியோவில் இந்தத் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் வெளியீடு குறித்து  குறித்து கருத்து தெரிவித்த தளபதி விஜய், “ வாரிசு  எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்த ஒரு படம். ஒரு பிரும்மாண்டமான  பின்னணியைக் கொண்ட கதையாக இது இருந்தாலும், அடிப்படையில் ஆழ்ந்த உணர்ச்சி மிக்க குடும்ப உறவுகளைப் பற்றி பேசும் ஒரு படம். . மேலும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது நாங்கள் அற்புதமாக உணர்ந்தோம், மேலும் இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த மக்களிடமிருந்து  இதுவரை நாங்கள்  பெற்ற பாராட்டையும், அன்பையும்  வரவேற்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். மேலும் இப்போது 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள எங்கள் ரசிகர்களும் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும் இந்தப் படத்தை கண்டு மகிழமுடியும் என்பதை அறியும் போது நாங்கள் மென் மேலும் உற்சாகமடைகிறோம்” என்று கூறினார். 

இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி மேலும் கூறுகையில், “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக எனது தயாரிப்பில் உருவான ஒரு  படத்தின் மீது பார்வையாளர்கள் தங்கள் அன்பையும் பாராட்டுகளையும் பொழிவதைப் பார்ப்பது,  எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, நாடகம், காதல் மற்றும் பலவற்றைக் கொண்ட வாரிசு,  குடும்பத்தினருக்கான  ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாகும்.  இதன் நட்சத்திர நடிகர்களின் மிகச்சிறந்த தன்னிகரில்லா நடிப்பு மற்றும் மனதைக் கவர்ந்திழுக்கும்  இசையும் மனதை ஈர்க்கும் இதன் கதைக்களத்தை நிறைவு செய்யும் வகையில், அமைந்து இந்தத் திரைப்படத்தை கட்டாயம் கண்டு மகிழ வேண்டிய ஒன்றாக மென் மேலும் உயர்த்துகிறது. திரையரங்குகளில்  பரபரப்பான மற்றும் வெற்றிகரமான ஓட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 முதல் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும் போது இன்னும் அதிகமான பார்வையாளர்கள் வாரிசு திரைப்படத்தை கண்டு  ரசித்து மகிழ  முடியும் என்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார் .

 

XXX

ப்ரைம் வீடியோ பட்டியலில் உள்ள ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களோடு  வாரிசு இணையும். . இதில் மஜா மா, ஹஷ் ஹஷ், க்ராஷ் கோர்ஸ், பஞ்சாயத்து, மாடர்ன் லவ் ஹைதராபாத், சுழல் – தி வோர்டெக்ஸ், மாடர்ன் லவ் மும்பை, கில்ட்டி மைண்ட்ஸ், மும்பை டைரிஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான், ப்ரீத்  இன் டு தி ஷேடோஸ் பாண்டிஷ்  பாண்டிட்ஸ், பாதாள் லோக், மிர்சாபூர், தி ஃகாட்டன் ஆர்மி – ஆசாதி கே லியே, சன்ஸ் ஆஃப் தி சாயில: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைட் எட்ஜ், போன்ற இந்திய தயாரிப்பான அமேசான் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைபடங்கள் அடங்கும். மற்றும் மற்றவற்றுக்கிடையில் இந்தியத் திரைப்படங்களான ஷேர்ஷா, சர்தார் உதம் கெஹ்ரையன், ஜல்சா, ஷெர்னி, டூஃபான், கூலி எண். 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், மாலிக், ஜோஜி, பொன்மகள் வந்தாள், சர்ப்பட்டா பரம்பரை, ஹோம், பிரெஞ்ச் பிரியாணி, சுஃபியும் சுஜாதாயும், நிசப்தம், மாரா, வீ, சி யு சூன், சூரரைப் போற்று, பீம சேனா நல மஹாராஜா, திருஷ்யம் 2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், புத்தம் புது காலை,அன்பாஸ்ட், ஆகியவைகளும் மற்றும்  மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற விருதுகள் வென்ற உலகளாவிய அமேசான் ஒரிஜினல்களான, லார்ட் ஆப் தி ரிங்ஸ்,: தி ரிங்ஸ் ஆப் பவர், டெர்மினல் லிஸ்ட் , ரீச்சர், சிண்ட்ரெல்லா, தி வீல் ஆஃப் டைம், போரட் சப்ஸிக்வெண்ட் மூவிஃபிலிம், தி டுமாரோ வார், வித்தவுட் ரிமோர்ஸ், அப்லோட், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழித் திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன.