நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் சிம்புவுக்கு கதாநாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி , ஒய் ஜி மகேந்திரன், எஸ்.ஜே. சூர்யா, உதயா, கருணாகரன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு மனோஜ் பாரதிராஜா டேனியல் ஆகியோர் கொண்ட ஒரு நடிகப் பட்டாளமே இந்தப் படத்தில் பங்கேற்று நடிக்கின்றனர்..
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது.
அதில் அரசியல் கூட்டங்களை வைத்து மாநாடு திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளுக்கு கூட்டம் தேவைப்படும். படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு விலக்கினாலும் 70 முதல் 80 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டால் மாநாடு போன்ற ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கை எப்படி நடத்த முடியும்? அதே படக்குழுவினருடன் இணைந்து வேறொன்றைப் படமாக்க ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார். அந்த செய்திக்கு மாநாடு கைவிடப்பட்டதா? என்று தலைப்பிட்டிருந்தனர்.
இந்தச் செய்தியை குறிப்பிட்டு மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“மீண்டும் இதுபோல் செய்திகள் வந்தால் நான் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனத்தை சும்மா விடமாட்டேன்.
எப்போதும் எனக்கு ஊடகத்துறையினர் மீது மிக பெரிய மரியாதை உள்ளது.
மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டதாக நான் எந்த விஷயமும் சொல்லவில்லை.
தயாரிப்பாளரின் கருத்தை கேட்காமல், எப்படி இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை வெளியிடலாம்?
மாநாடு ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது” என கடுமையாக பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
If such a news comes hereafter i wl sue the concern media.I always respect media team and being close to thm. I never gave any statement like this.Without cross checking wth a producer hw can a reputed publication print a news? #Maanaadu never going to drop.Plz stop ur table work pic.twitter.com/Bmyd5Muom9
— sureshkamatchi (@sureshkamatchi) August 6, 2020